தற்போதைய ஆட்சி 6-மாதத்தில் முடிவுக்கு வரும்..முன்னாள் முதலமைச்சர் பரபரப்பு பேட்டி!
அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றக்கோரி புதுச்சேரி போராட்ட களமாக மாறி உள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:புதுவையில் துணைநிலை ஆளுநர் தனி அரசாங்கத்தை நடத்துகிறார்.முதலமைச்சர், துணைநிலை ஆளுநருக்கிடையே போட்டி அரசாங்கம் நடக்கிறது.
மேலும் முதல்வரின் ஒப்புதல் இல்லாமல் துணைநிலை ஆளுநர் உத்தரவு போடுகிறார்.மக்களால் தேந்தேடுக்கப்ட்ட அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரை புறந்தள்ளுகிறார் துணைநிலை ஆளுநர்.முதலமைச்சர் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள வாய் முடிக்கொண்டு டம்மி அரசாங்கம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என முதலமைச்சர் தெரிவிக்கிறார்.ஆளத் திறமை இல்லாமல் அதிகாரியை குறை சொல்கிறார்.அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றக்கோரி புதுச்சேரி போராட்ட களமாக மாறி உள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.