புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும்..முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல்!

Loading

பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் முன்னிலையில் உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

காமராஜர் மணிமண்டபத்தில் 3-நாட்கள் நடைபெறும் சுகாதார திருவிழாவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம்,அமைச்சர் சாய் சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்து பல்வேறு அரங்குகளை பார்வையிட்டனர்.

பின்னர் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி நிர்வாகத்தில் விரைவாக செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம்.பெரிய அளவிலான குறைபாடுகள் இல்லை என்றாலும் குறைபாடுகள் உள்ளது.

விரைவான செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும்,பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் முன்னிலையில் உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

0Shares