ரஜினியுடன் கைகோர்க்கும் பூஜா ஹெக்டே..எந்த படத்தில் தெரியுமா?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ரஜினியின் கூலி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’ பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.இதையடுத்து இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.இதையடுத்து அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.
மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மீதமிருக்கும் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பை மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய உள்ளது என்றும் இந்த படமானது ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் , இப்படத்தில் இடம் பெற்றுள்ள குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது கூலி படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.அதில் , நடிகை பூஜா ஹெக்டே ‘கூலி’ படத்தில் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.