வில்லியனூர் பகுதியில் மீண்டும் புரட்சித் தலைவர் திருஉருவ சிலை..அதிமுக உரிமை மீட்பு குழு வரவேற்பு!
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுவை மாநில அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என ஆலோசனை கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானிக்க பட்டது.
புதுவை மாநில அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில நிர்வாகிகள்,மாநில பிற அணி செயலாளர்கள், தொகுதி செயலாளர், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் லெனின் வீதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.மாநில கழக அவைத்தலைவர் மாசிலா குப்புசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில கழக செயலாளர் ஓம்சக்தி சேகர் சிறப்புரையாற்றினார்.
அப்போது கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன!
தீர்மானம் – 1
கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் OPS அவர்களின் ஆணைப்படி இதய தெய்வம் கழக நிரந்திர பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை புதுவை மாநிலமே வியக்கும் வகையில் புதுவை மாநில அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் மாநில கழக செயலாளர் திரு ஓம்சக்தி சேகர் அவர்கள் தலைமையில் சிறப்பான முறையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என இந்த கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானிக்க பட்டது.
தீர்மானம் -2
இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் தொண்டர்களுக்காகவே இந்த இயக்கம் என்று ஆரம்பித்து அதே கொள்கையை தொண்டர்களால் நான் தொண்டர்களுக்காகவே நான் என இயக்கத்தை கட்டி காத்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் சில சுயநலவாதிகளால் அபகரிக்கப்பட்ட கழகத்தை மீண்டும் தொண்டர்கள் இயக்கமாக மாற்றிட அயராது உழைத்து வரும் கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி அவருக்கு எப்போதும் புதுச்சேரி மாநில கழகம் துணையாக நிற்கும் என்பதை இந்த நேரத்தில் இக்குழு வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் -3
மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவில் கழக உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் அவரவர் இல்லங்களில் கழக கொடியை ஏற்றி மாண்புமிகு அம்மா அவர்களின் உருவ படம் வீட்டின் முன் வைத்து தங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் என இக்குழு நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டு கொள்கிறது.
தீர்மானம் – 4
மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த புதுவை முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் மாண்புமிகு அம்மா அவர்களின் சிலையை புதுவையின் மையபகுதியில் நிறுவிட வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் வலியுறுத்தி வரும் நிலையில் புதுவை அரசு மாண்புமிகு அம்மா அவர்களின் முழு திருவுருவ சிலையை அமைத்திட உடனடியாக ஆவணம் செய்ய இக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் -5
புதுவை மாநிலத்தில் ஆண்டு தோறும் பொறியியல் கல்லூரிகளில் ஆயிர கணக்கில் மாணவர்கள் படித்து முடித்து வேலைக்காக அண்டை மாநிலங்களான தமிழகம்,பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை தேடி செல்லும் சூழலை மாற்றி புதுவையில் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற புதுவை மாநிலத்தில் மென்பொருள் பூங்கா ஒன்றினை அமைத்திட வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று இந்த குழு புதுவை அரசை கேட்டுக் கொள்கிறது..
தீர்மானம் -6
புதுவை மாநிலத்தில் வருவாய்த்துறை மூலமாக மாணவர்களுக்கு பொது தேர்வுகள் முடிந்த பின்னர் வழங்கப்படும் சாதி,குடியிருப்பு, குடியுரிமை உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற சிரமம் நிலவுவதால் அந்தத பள்ளிகளில் வருவாய்த்துறை மூலமாக சாதி,குடியிருப்பு உள்ளிட்ட சான்றிதழ் வழங்கிட புதுவை அரசு நடவடிக்கை எடுக்க இந்த குழு கேட்டு கொள்கிறது.
தீர்மானம் -7
புதுவை மாநிலம் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் உப்புத்தன்மை அதிகம் இருப்பதால் பொதுமக்களால் பருக முடியாத நிலை உள்ளது. எனவே புதுச்சேரி முழுவதும் உள்ள பழைய குடிநீர் குழாய்களை மாற்றி பொது மக்களுக்கு சிறந்த சுத்தமான குடிநீர் கிடைத்திட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க இந்த குழு கேட்டு கொள்கிறது.
தீர்மானம் -8
புதுவை மாநிலத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் முதியோர்,விதவை,கணவரால் கை விடப்பட்டவர் உள்ளிட்ட மாதாந்திர உதவி தொகைகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இதில் முதியோர் உதவித் தொகை அவ்வப்போது அரசால் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் விதவை உதவித்தொகை உயர்த்தப்படாமல் உள்ளது எனவே எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் விதவை உதவித்தொகையை 3000 ஆக உயர்த்திட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் -9
புதுவை மாநிலத்திற்கு கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் நிதி மானியம் குறைந்து சொந்த நிதி வருவாயை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. நமது புதுச்சேரியை விட உள்நாட்டு உற்பத்தி (GDP) குறைவாக உள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீர் லடாக் ஆகியவற்றிற்கு மாநில அந்தஸ்து வழங்கி நிதி குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் பலமுறை சட்டமன்றத்தில் மாநில அந்த அரசு தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. எனவே புதுச்சேரி மாநிலம் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி அடைய மாநில அந்தஸ்து வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் -10
புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்று இயங்கி வந்த AFT,பாரதி ,சுதேசி, உள்ளிட்ட பஞ்சாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிய இந்த பஞ்சாலைகளை புனரமைப்பு செய்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட மூன்று பஞ்சாலைகளையும் ஒருங்கிணைத்து புதிதாக ஜவுளி பூங்கா ஒன்றினை மாநில அரசு உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தக் குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் -11
புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட புரட்சித் தலைவர் அவர்களின் திருஉருவ சிலை நமது தொடர் கோரிக்கை காரணமாகவும் புரட்சித்தலைவர் விசுவாசிகளின் அழுத்தத்தின் காரணமாகவும் தற்போது அரசின் சார்பில் நிறுவப்பட உள்ளது. சிலை அமைக்க நடவடிக்கை எடுத்த புதுவை முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களுக்கும் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் எங்களது நன்றிகளை தெரிவித்து புரட்சித்தலைவர் அவர்களின் சிலைக்கு நிரந்தர படிக்கட்டுகள், நிழல் குடை, அமைத்திட வேண்டுமென்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவில் இந்த சிலை திறப்பு விழாவை திறந்திட வேண்டும் என்றும் புதுச்சேரி அரசை இக்குழு கேட்டுக்கொள்கிறது.