மகா கும்பமேளா நடக்கும் நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை..மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரபரப்பு அறிக்கை!

Loading

மகா கும்பமேளா நடக்கும் உ.பி. பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் ‘Faecal Coliform’ என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதால், குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமம்’ என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி மகா கும்பமேளா கோலாகலமாகத் தொடங்கியது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான இந்த கும்பமேளா மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.இங்கு 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், பிரயாக்ராஜ் நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:மகா கும்பமேளா நடக்கும் உ.பி. பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் ‘Faecal Coliform’ என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதால், குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும் என்றும் இவை அதிகளவில் இருக்கும் ஆற்றில் நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் புனித நீராடி வருகின்றனர் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

0Shares