நள்ளிரவு 12-மணி வரை கடைகள் திறக்க அனுமதி..எங்கு தெரியுமா?
புதுச்சேரியில் 11-மணிக்கு சாலையோர கடைகளை மூட காவல்துறை அறிவுறுத்திய நிலையில் அந்த கடைகள் நள்ளிரவு 12 மணி வரை நடத்த அனுமதி என்றும் ஒரு சில நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அரசின் அனுமதி பெற்று சிட்டி சர்வைலன்ஸ் மூலம் நகரப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார் ,அப்போது அவர் கூறியதாவது:3 பேர் கொலை வழக்கில் 11 நபர்கள் கைது செய்யப்பாடு சிறையில் அடைப்பு.காவல்துறை கொலை குற்றத்தில் தொடர்புடையவர்களை 30 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆபரேஷன் திரிஷில் மூலம் ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டு அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
காவல்துறை மூலமாக ஆபரேஷன் வேட்டை என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் முதன்மையாக இருக்க கூடிய 10 முக்கிய குற்றவாளிகளை தனிப்பட்ட முறையில் காவலர் கண்காணிக்க உள்ளனர்.இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த காவலர்களுக்கு உத்தரவு.
11-மணிக்கு சாலையோர கடைகளை மூட காவல்துறை அறிவுறுத்திய நிலையில் அந்த கடைகள் நள்ளிரவு 12 மணி வரை நடத்த அனுமதி.ஒரு சில நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அரசின் அனுமதி பெற்று
சிட்டி சர்வைலன்ஸ் மூலம் நகரப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
6-வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் அளித்த ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அமைத்துள்ளனர்ஒரு சில அரசியல் கட்சியினர், முன்னாள் முதலமைச்சர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சுயலாபத்திற்காக சிறுமி பாலியல் வழக்கில் அரசியல் செய்கின்றனர்.
இந்த ஆட்சியில் தொடர்ந்து கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை போல முன்னாள் முதலமைச்சர் நாராயண சாமி குற்றம்சாட்டி வருகிறார்.தற்போதைய முதல்வர், சபாநாயகர் மற்றும் உள்துறை அமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்னாள் முதலமைச்சர் கூறி வருகிறார் அவருக்கு வன்மையான கண்டனம்.
கடந்த 4- ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது.கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் 413 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளது , 366 போக்சோ வழக்குகள், 47 கற்பழிப்பு, 174 கொலைகள் நடைபெற்றுள்ளது.
தவறான தகவல்களை மக்கள் மத்தியில் முன்னாள் முதலமைச்சர் பரப்பி வருகிறார், காவல்துறை மீது கலங்கம் விலைவிக்கும் வகையில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வருகிறார்.
தரம் தாழ்ந்து பேசி வருகிறார், நாங்கள் பேச ஆரமித்தால் தாங்க மாட்டீர்கள்.அரசியலுக்காக எது வேண்டுமானாலும் பேசலாம் என்பது கிடையாது.
எந்த அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறுகளை பரப்புவதை முன்னாள் முதலமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ள வேண்டாம், தொடர்ந்து பேசினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் – உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.