கோடை காலத்தில் இனி இந்த பிரச்சனை இருக்காது..வெளி சந்தைகளில் மின்சாரம் வாங்க அனுமதி!

Loading

தமிழகத்தில் கோடைகால மின்தேவையை சமாளிக்க வெளி சந்தைகளில் மின்சாரம் வாங்க மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக கோடைகாலத்தில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் என்றால் வெயிலும், மின்வெட்டும் தான். அப்படி வெயில் தகித்துக் கொண்டிருக்கும் போது, மின்வெட்டு ஏற்பட்டால் வியர்வையில் நனைந்து விடுவோம். ஆனால், இந்த ஆண்டு இந்தப் பிரச்சனையே இருக்காது என தமிழக மின்துறை நற்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் தமிழகத்தில் கோடைகால மின்தேவையை சமாளிக்க வெளி சந்தைகளில் மின்சாரம் வாங்க மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் கோடை கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தையில் வாங்க மின்சார அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

அதுபோல மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையிலான மின்சார தேவையை பூர்த்தி செய்ய வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு மின்சாரத்துறைக்கு கோடைக்காலத்தில் ஏற்படும் அதிக மின் தேவையை சமாளிக்கும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
.

0Shares