திறந்தவெளி விளையாட்டு திடல் – கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்!
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி விளையாட்டு திடலை கனிமொழி எம்.பி இன்று திறந்து வைத்தார்.
தூத்துக்குடி, பி அண்ட் டி காலனி 12வது தெருவில், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி விளையாட்டு திடல் திறப்பு விழா இன்று 17/02/2025 நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு திறந்தவெளி விளையாட்டு திடலை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, திறப்பு விழாவில் விளையாட்டு சாதனங்களை இளைஞர்களுக்கு கனிமொழி எம்.பி வழங்கினார்.
இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.