49 செம்மறி ஆடுகள் உடல் கருகி பலி..கடலூர் அருகே சோகம்!
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆட்டுக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 49 செம்மறி ஆடுகளும் தீயில் கருகி இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வாகையூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் அப்பகுதியில் உள்ள அவரது விவசாயம் செய்து வருகிறார். மேலும் தனது வயலில் செம்மறி ஆடுகளையும் வளர்த்து வந்தார் குமார்.
இந்நிலையில் வயலில் உள்ள தனது ஆடுகளை பார்க்க குமார் வந்துள்ளார்.அப்போதுதான் குமாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது,தனது ஆட்டுக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 49 செம்மறி ஆடுகளும் தீயில் கருகி செத்துக் கிடந்ததை பார்த்த குமார் கதறி அழுதார். அப்போது இத்தனை நாட்கள் பார்த்து பக்குவமாக வளர்த்த ஆடுகள் இப்படி ஆனதை எண்ணி குமார் சோகத்தில் மூழ்கினார்.மேலும் இந்த சம்பவம் திட்டக்குடி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார் குமார் . இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அருகில் உள்ள இடத்தில் விவசாய கழிவுகளை எரித்த நிலையில் தீ பரவி இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்தது அடுத்த கட்ட நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர்.