சிறிய ரக விமானம் சாலையில் மோதி விபத்து ..2 பேர் பலி..பிரேசிலில் சோகம்!

Loading

பிரேசில் நாட்டின் சாவ் பாலோ என்ற நகரில் சிறிய ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் . சாலையில் சென்ற மேலும், பலர் காயமடைந்தனர்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். இந்நாட்டின் சாவ் பாலோ என்ற நகரில் இருந்து நேற்றுசிறிய ரக விமானம் புறப்பட்ட து. அந்த சிறிய ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.இந்த விமானத்தில் விமானி, விமான உரிமையாளர் என 2 பேர் பயணம் செய்தனர் என முதல்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.

அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென பிசியான சாலையில் மோதியது.இந்த விபத்தில் குறைந்தது 2 பேர் பலியாகினர் . சாலையில் சென்ற மேலும், பலர் காயமடைந்தனர்.தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

0Shares