சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர்…அஜித்தை பாராட்டிய ‘மங்காத்தா’ இயக்குனர்!
“விடாமுயற்சி திரைப்படத்தில் ஒரு சராசரி மனிதனாக அஜித் நடித்திருப்பது அருமையாக உள்ளது என்றும் ஆனால், படத்தில் செம்ம சர்ப்ரைஸாக அமைந்தது அர்ஜுனும், ரெஜினாவும் என படக்குழுவினருக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான சென்னை 600028 1 மற்றும் 2 , மாசு, மங்காத்தா, சமீபத்தில் வெளியான தி கோட் போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு.
இந்த சூழலில், ‘மங்காத்தா’ படத்தில் நடித்திருந்த அஜித் தற்போது நடித்துள்ள ‘விடாமுயற்சி’படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தநிலையில் இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குனர் வெங்கட் பிரபு விடாமுயற்சி படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,கூறியிருப்பதாவது:
“விடாமுயற்சி திரைப்படத்தில் ஒரு சராசரி மனிதனாக அஜித் நடித்திருப்பது அருமையாக உள்ளது என்றும் ஆனால், படத்தில் செம்ம சர்ப்ரைஸாக அமைந்தது அர்ஜுனும், ரெஜினாவும் என்றும் படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகள் என்றும் இப்படம் சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர் என்றும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.