போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது நிலையில் இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.இதனால் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர். மீண்டும் அவர்களை அவர்களுடைய இடத்தில் குடியமர்த்துவதுதான் நோக்கம் என இஸ்ரேல் அறிவித்து லெபனான் மீது தாக்குதல் நடத்தியது.
இதனால் லெபனான் மக்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்தனர். 3,800க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இஸ்ரேல்- லெபனான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. முயற்சி மேற்கொண்டன. இதன்படி ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த நவம்பர் 27 முதல் அமலுக்கு வந்தது.
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது நிலையில் இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான லெபனானின் இரண்டு ஆயுத கூடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
லெபனான் எல்லைக்கு உட்பட்ட இரண்டு ஆயுத கிடங்குகளில் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான ஆயுதங்கள் இருந்ததாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் அவற்றை துல்லியமாக தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இந்த நிலையில் தான் இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.