அமெரிக்கா நாடுகடத்துவது புதிதல்ல – ஜெய்சங்கர் விளக்கம் !
சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடுகடத்துவது புதிதல்ல என்று எதிர் கட்சிகளுக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்ட விவகாரம் குறித்து மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்,அப்போது அவர் பேசியதாவது:-
104 இந்தியர்கள் திரும்பி வந்த விவகாரத்தில் புதிய நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் அமெரிக்க ராணுவ விமானத்தில் அனுப்பும்போது கை விலங்கு போடும் நடைமுறை 2012 முதல் அமலில் உள்ளது என்றும் அதன்படி, அவர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டது என்றும் பெண்கள், குழந்தைகளுக்கு கை விலங்கு போடப்படவில்லை என கூறினார்.
மேலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல என்றும் இந்தியர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்காவின் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் எந்த நடைமுறை மாற்றமும் இல்லை என்றும் கை, கால்களில் விலங்கு போடப்பட்டிருந்ததால் கழிவறைக்கு செல்வதில் கூட சிரமத்தை சந்தித்துள்ளனர் என்றும் திரும்பி அனுப்பப்படும் இந்தியர்களை, மரியாதையுடன் நடத்த அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இவ்வாறு அவர் கூறினார்.