சோமன்னார்குடி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சோமன்னார்குடி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு .
கள்ளக்குறிச்சி மாவட்டம் சோமண்டார்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்வு நட்பு திருவிழா என்ற பெயரில் நடைபெற்றது. 1980-1995ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு பள்ளி பருவத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். தான் படித்த வகுப்பறையில் அவரவர் அமர்ந்த இடத்தில் பாடங்களை கற்பிக்கும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் .அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உணவு அருந்திவிட்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பிரம்படி கொடுத்தது, காதை பிடித்து திருகியது , முட்டி போட்டது போன்ற பழைய நினைவுகள் மூலம் இன்று உயர்ந்த நிலையில் இருக்க காரணம் என்று மாணவ, மாணவிகள் நெகிழ்ச்சியுடன் கண் கலங்க கூறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.