ரூ 12லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கு செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

Loading

விழுப்புரம் மாவட்டம். செஞ்சிபேரூராட்சி 12வது வார்டு சக்கராபுரத்தில்
 ரூ 12லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கு செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 12வது வார்டுசக்கராபுரம் பழைய காலணி 1வது தெருவில் தெருவில்அயோத்திதாசர் பண்டிதர் திட்டத்தின் கீழ் 12லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் வாய்க்காலுடன் கூடிய புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான் தலைமை தாங்கினார் .வார்டு கவுன்சிலர்அகல்யா வேலு அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 12லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்வடிகால் வாய்க்காலுடன் கூடிய புதிய சிமென்ட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் ,மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, நகர செயலாளர் கார்த்திக்,அரசு வழக்கறிஞர்தமிழ்ச்செல்வி கர்ணன்,முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயா முனுசாமி, பாஸ்கரன்,தோழமைக் கட்சி நிர்வாகிகள் சூரியமூர்த்தி ,சீனிவாசன்,சிவா,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ,திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0Shares