இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 5 வயது சிறுமி சாதனை
இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 5 வயது சிறுமி சாதனை
மதுரை தபால் தந்தி நகர் மீனாட்சி நகரில் அமைந்துள்ள JAP ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கராத்தே சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. 5 வயது, 9 மாதத்தில் இருந்த சாதனையை, மதுரை JAP ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ஜெயின் வித்யாலயாவில் பயிலும் 1வது வகுப்பு பள்ளி மாணவி A. சாய்னா அவர்கள், 5 வயது, 5 மாதத்தில் முறியடித்து, கராத்தே பிளாக் பெல்ட் பெற்று இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்தார். இதுகுறித்து சாய்னா பெற்றோர்கள் M. அசோக் குமார், G. மனோஹரி ஆகியோர் செய்தியாளர்களும் தெரிவிக்கையில், கியோசி மாஸ்டர் J. அருள் பிரகாஷ், சீகான் மாஸ்டர் S. கணேசன் ஆகியோர், எங்கள் குழந்தைக்கு நல்ல பயிற்சியும், தன்னம்பிக்கையும், ஊக்கமும் கொடுத்து இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என நெகிழ்ச்சியுடன் கூறினர். நிகழ்ச்சியில் பங்கு பெற்ற JAP பயிலும், 13 கராத்தே பள்ளி மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மக்கள் சேவை இயக்கம் நிறுவனத் தலைவர் G. ஜெயபாலன், தலைமை நிலைய செயலாளர் பிரியா கிருஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர் P. சுரேஷ், IT விங்க் நிர்வாக செயலாளர் G. இளவரசன், கராத்தே மாஸ்டர்கள் பாஸ்கரன், கார்த்திகேயன், ஜோசப் மற்றும் கராத்தே பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்