பொது அறிவை வளர்த்துக்கொள்ள பத்திரிகைகளை படிக்க வேண்டும் ஜி விஸ்வநாதன் அறிவுரை
பொது அறிவை வளர்த்துக்கொள்ள பத்திரிகைகளை படிக்க வேண்டும் ஜி விஸ்வநாதன் அறிவுரை
சென்னை , செப். 29 உங்கள் தொகுதி எம்பி யார் எம்எல்ஏ யார் என்று தெரியாமல் இருக்க கூடாது பொது அறிவை வளர்த்துக் கொள்ள பத்திரிகைகளையும் புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு விஐடி வேந்தர் விஸ்வநாதன் அறிவுறுத்தினார். பத்திரிகையாளர் அருண்குமார் எழுதிய ‘தல இது தபால் தல’ புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், விஐடி வேந்தர் ஜி. விஸ்வநாதன் தலைமை தாங்கி புத்தகத்தை வெளியிட்டார். பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய விஐடி வேந்தர் விஸ்வநாதன், “முதன்முறையாக தபால் தலை பற்றிய ஆய்வுப் புத்தகம், ‘தல இது தபால் தல’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. வனாட்டு என்ற 83 தீவுகள் உள்ள நாட்டில், கடலுக்கு அடியில் தபால் நிலையங்கள் இருக்கின்றன. எரிமலையிலும் தபால் நிலையங்கள் இருக்கின்றன என்ற அரிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களிடையே படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும். படிக்கச் சொன்னால் மாணவர்கள் செல்போன் மூலம் படிப்பதாகச் சொல்கிறார்கள். பலருக்கு உங்கள் தொகுதி எது?! உங்கள் எம்எல்ஏ யார்? எம். பி யார்? கேட்டால் தெரியவில்லை. மாணவர்கள் பொது அறிவை வளர்த்து கொள்ள பத்திரிகைகளை படிக்க வேண்டும். புத்தகங்களைப் படிக்க வேண்டும். அந்தப் பழக்கத்தை மாணவர்களிடம் ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும். கடிதம் எழுதும் பழக்கத்தையும் ஊக்குவிக்க வேண்டும். தம்பிக்கு பேரறிஞர் அண்ணா எழுதிய கடிதங்கள் பிரபலமானவை. இந்திரா காந்திக்கு நேரு எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ்பெற்றவை. படிக்கும் பழக்கத்தை மட்டுமல்ல: எழுதும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, விஐடி துணைத்தலைவர் ஜி.வி. செல்வம், பாரதி புத்தகாலயத்தின் மேலாளர் நாகராஜன், பத்திரிகையாளர் ராமசாமி, நூலாசிரியர் அருண்குமார், டாக்டர் ஐஸ்வர்யா அருண்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மூத்த பத்திரிகையாளர் அருண்குமார் எழுதிய, “தல இது தபால் தல ” புத்தகத்தை விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் வெளியிட, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பெற்றுக்கொண்டார் உடன் விஐடி துணைத்தலைவர் ஜி. வி. செல்வம், மூத்த பத்திரிகையாளர் ராமசாமி, பாரதி புத்தகாலயம் நாகராஜன், டாக்டர் ஐஸ்வர்யா அருண்குமார், நூலாசிரியர் அருண்குமார் ஆகியோர் உள்ளனர்
மூத்த பத்திரிகையாளர் அருண்குமார் எழுதிய, “தல இது தபால் தல ” புத்தகத்தை விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் வெளியிட, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பெற்றுக்கொண்டார் உடன் விஐடி துணைத்தலைவர் ஜி. வி. செல்வம், மூத்த பத்திரிகையாளர் ராமசாமி, பாரதி புத்தகாலயம் நாகராஜன், டாக்டர் ஐஸ்வர்யா அருண்குமார், நூலாசிரியர் அருண்குமார் ஆகியோர் உள்ளனர்…