முதுகுத் தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பொதுக்கூட்டம்

Loading

முதுகுத் தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பொதுக்கூட்டம் கோயம்புத்தூர் மாவட்டம், வாகராயம்பாளையம் அனுகிரஹா இல்லத்தில் நடைபெற்றது.
 ஆண்டுப் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்கள் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டார்கள். அமைப்பின் தலைவர் திரு கருணாகரன் செயலாளர் திரு சரவணன் பொருளாளர் திரு சரத்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இரண்டு நாள் நிகழ்ச்சியில் அமைப்பின் வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் நலன் சார்ந்த கலந்துரையாடல் நடைபெற்றது.  நிகழ்வில் மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக இணை இயக்குனர் திரு ரவீந்திரன் மற்றும் கூட்டுறவு உணவு வழங்கல் துறை செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் ஜூம் செயலி வழியாக வாழ்த்துரை வழங்கினார்கள்.  கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை முதல்வர் திருமதி நிர்மலா அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சஹாய் மறுவாழ்வு பயிற்சி மையம் பிசியோதெரபிஸ்ட் திரு கஜேந்திரன் அவர்கள் மற்றும் சேஷையர் மறுவாழ்வு பயிற்சி மையம் திரு ஷியாம் மற்றும் அமர் சேவா சங்கம் சார்பாக ஜூம் செயலி மூலமாக திருமதி சுமிதா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.  இரண்டு நாள் நிகழ்ச்சிக்கும் தமிழக முழுவதும் வந்திருந்த 100 தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு  கோவை வாகராயம்பாளையம்  அனுகிரஹா இல்லம் நிறுவனத் தலைவர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் உணவு தங்கமிடம் என அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக செய்து கொடுத்துள்ளார்கள். 
0Shares