திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றதினை மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கரிடம் காண்பித்து வாழ்த்து

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றதினை மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர் :

திருவள்ளூர் செப் 14 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது -2024 (நல்லாசிரியர் விருது) பெற்றத்தினை  மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிப்பட்டு கேசவராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஸ்டேன்லி குமார், பூண்டி சென்ராயன் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளி, வில்லிவாக்கம் வேலப்பன்சாவடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை வரலட்சுமி, திருவூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை மலர்க்கொடி, ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி காவேரி, வில்லிவாக்கம் ஆரிக்கம் பேடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்  ஜெயராமன், பூவிருந்தவல்லி கோவர்த்தனகிரி ஆவடி நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி, புதுகும்மிடிபூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் இந்துமதி, வில்லிவாக்கம் புதிய கன்னியம்மன் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமால், பூவிருந்தவல்லி வயலாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சிங்கராஜ், அரசு அலுவலர் குடியிருப்பு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முகப்பிரியா, பூவிருந்தவல்லி காட்டுப்பாக்கம் டிவிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜோஸ்பின் ஜெயந்தி போன்ற 12 ஆசிரியர்கள் 2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு -2024 (நல்லாசிரியர் விருது) தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதினை  மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.
இதில் முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் கோவிந்தராஜ், திருவள்ளூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மோகனா, திருவள்ளூர் வட்டார கல்வி அலுவலர் வீரராகவன், ஒருங்கிணைப்பாளர் பவானி மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
0Shares