கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ம் மற்றும்12ம் வகுப்பு தேர்வில் அதிக சதவிகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன் சிஇஓ கார்த்திகா உறுதி. 

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ம் மற்றும்12ம் வகுப்பு தேர்வில் அதிக சதவிகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன் சிஇஓ கார்த்திகா உறுதி. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் முருகன் சென்னை பள்ளி கல்வி இயக்கம் துணை இயக்குனர் மின் ஆளுமை அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார் இதனை எடுத்து மதுரை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவை கள்ளக்குறிச்சி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யது தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில்  பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா செய்தியாளர்களிடம் கூறுகையில் அரசின் திட்டங்கள் மாணவர்களுக்கு முறையாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் மாணவர்கள் பள்ளிக்கு தினந்தோறும் வருகை குறித்து கண்காணிக்கப்படும் மேலும் தினந்தோறும் அரசு பள்ளிகள் ஆய்வு செய்யப்படும் அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டார். இந்த ஆண்டு 10ம் மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி விதம் அதிகரிக்க உரிய  நடவடிக்கை மேற்கொள்வேன் என கூறினார்.
0Shares