ரூ 53.21 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான்திறந்தார்
செஞ்சி ஒன்றியத்தில்
ரூ 53.21 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் பொன்பத்தி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 22.65 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம்,கவரை ஊராட்சியில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் ரூபாய் 7.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பகுதி நேர நியாய விலை,
தென் புதுப்பட்டு ஊராட்சியில் / தேசிய கிராமசுயாட்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 23.56லத்த மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு ம் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. -. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார் தலைமையில் தாங்கினார். , ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார்
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீத்தாலட்சுமி, முல்லை, செஞ்சி மத்திய ஒன்றிய செயலாளர் விஜயராகவன், மாவட்ட விவசாய அணி தலைவர் அஞ்சாஞ்சேரி கணேசன், ஒன்றிய அவை தலைவர்கள் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக நிர்வாகிகள்
கலந்து கொண்டனர்.