ஆடிப்பெருக்கு நாளில் ஆவண பதிவுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Loading

 அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழக பதிவுத்துறை அமைச்சருக்கு நன்றி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

 

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,.

 

எதிர்வரும் 2024ஆகஸ்ட் 3 சனிக்கிழமைஆடி 18 சுபதினமான ஆடிப்பெருக்கு தினத்தன்றுஅசையா சொத்து குறித்த ஆவணப் பதிவுகளை பதிவு செய்ய விரும்பும் பொது மக்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்பளித்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில்மேற்கண்ட அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோரிக்கை கடித எண். 033/2024, நாள்: 30.07.2024 இன் படி தங்களுக்கு முன் வைத்த கோரிக்கையை ஏற்றுஆடிப்பெருக்கு 03.08.2024 சனிக்கிழமை மங்களகரமான நாளில் பதிவு அலுவலகங்கள் செயல்படுவதற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அரசு வணிகவரி மற்றும் பதிவுத்துறை கடித எண். 356/ஜெ2/2022-1 உடன் பெறப்பட்ட அரசு வணிகவரி மற்றும் பதிவுத்துறை கடித (டி) எண். 68, நாள்.12.04.2021 இன் படி அரசு அனுமதியை நடைமுறைப்படுத்தியும்மேலும் அரசு வணிகவரி மற்றும் பதிவுத்துறை கடித (டி) எண்.231/ஜே2/2024 நாள்.31.07.2024 இன் படி வரவிருக்கும் 03.08.2024 சனிக்கிழமை அன்று ஆடிப்பெருக்கு நாளில் ஆவண பதிவுகளை மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும் ஆவண பதிவுகள் மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து பதிவுகளும் அன்றைய தினத்தின் வழக்கம்போல காலை 10 மணி முதல் ஆவண பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவர் அவர்களின் அவசரம் மற்றும் உடனடி நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ள கடித ந.க. எண் 15406/சி1/2024 நாள்.01.08.2024 இன் படி அனுமதித்துபொதுமக்களின் விருப்பத்தின் படி பதிவு செய்யும் வகையில் வழிவகை செய்தமைக்கு மேற்கண்ட எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் உளம் நிறைந்த பாராட்டுகளையும் இதயபூர்வமான வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *