பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு மக்கள் நலப் பேரவை தலைவர் கடிதம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு மக்கள் நலப் பேரவை தலைவர் கடிதம்,
சென்னை ஏப்ரல் 23,
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
நாடும் ஏடும் நாளும் போற்றும் வகையில் தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கு அல்லும் பகலும் அயராது பாடுபடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையின் கீழ், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சராக தாங்கள் பொறுப்பேற்ற பிறகு பள்ளி கல்வித்துறையின் தரமும் தேர்ச்சியும் வளர்ச்சியும் கணிசமாக உயர்ந்துள்ளதை யாரும் மறுக்கவும், மறைக்கவும், மறக்கவும் முடியாது. இத்தருணத்தில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம், ஊத்துக்கோட்டை வட்டம், பென்னளூர்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் திருமதி. ஜீவா அவர்களின் பொறுப்பற்ற செயல்பாடுகள் கல்வித்துறையில் ஒரு கரும்புள்ளியாக அமைந்துள்ளது. மேலும் அவரின் அலட்சியப் போக்கும், சக ஆசிரியர்களை அனாவசியமாக பேசியும், அவமானப்படுத்தியும், அடிமைத்தனமாக நடத்தியும், சாதீய வன்கொடுமைக்கு ஆளாக்கியும் வருவதன் காரணமாகவும் மற்றும் அந்த பள்ளியின் வளர்ச்சிக்கான எந்தவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லாததன் காரணமாகவும், அந்தப் பள்ளியின் கல்வி தரம் மிகவும் குறைந்தும், பள்ளியின் நிர்வாகம் சீர்குலைந்தும் போய் உள்ளது. இதன் விளைவாக இந்த ஆண்டு நடைபெற்ற அரசு தேர்வில் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் தோல்வியடைந்துள்ளனர்.
குறிப்பாக, பத்தாம் வகுப்பில் பயின்ற மாணவர்கள் 46 பேர் தேர்வு எழுதினர் இதில் 39 பேர் அதாவது 80 சதவிகித மாணவர்களும், பதினோராம் வகுப்பில் பயின்ற 52 மாணவர்களில் 50 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 25 பேர் அதாவது 50 சதவிகித மாணவர்களும், பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் 65 மாணவர்கள் தேர்வு எழுதினர் இதில் 50 மாணவர்கள் அதாவது 77 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது சம்பந்தமாக இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. ஜீவா அவர்களை தான் மாணவர்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சுமத்துகின்றனர். இவர் மீது ஏற்கனவே முதலமைச்சர் தனி பிரிவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிகிறது. இந்தப் பள்ளியில் கழிவறை, குடிநீர், பாதுகாப்பு சுற்று சுவர் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் ஏதும் சரியான பராமரிப்பு இல்லாமலும் மிகவும் மோசமான மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் ஆசிரியர்களும் மாணவர்களும் மற்றும் பள்ளியின் பணியாளர்களும் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், சக ஆசிரியர்களை பணி செய்ய விடாமலும், பள்ளியின் மோசமான கட்டமைப்பை குறித்து புகார் தெரிவித்தால், அவர்களை சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கி தலைமை ஆசிரியர் மிரட்டி விரட்டுவதும் தொடர் கதையாக இருந்து வருவதாக விசாரணையில் தெரிய வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் பள்ளியின் நிலைமை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் சூழ்நிலை மிகுந்த கவலை தரும் விஷயமாக உள்ளது.
ஆகவே, பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன் கருதி மேற்கண்ட பென்னலூர்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி சம்பந்தமான கோரிக்கையை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, கனிவுடன் பரிசீலித்து, தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக இட மாற்றம் செய்ய வேண்டும் என்றும், மேலும் சரியான தலைமை ஆசிரியரையும், போதிய பிற ஆசிரியர்களையும் நியமனம் செய்தும் மற்றும் பள்ளியின் அடிப்படை கட்டமைப்புகளை புணரமைப்பு செய்தும் உதவிடுமாறு