1895 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாட்டின் முதல் சுதேசி வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் 130 வது நிறுவன நாள் விழா
1895 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாட்டின் முதல் சுதேசி வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி
1895 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாட்டின் முதல் சுதேசி வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் 130 வது நிறுவன நாள் விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி வங்கி ஊழியர்கள் மத்தியில் ரத்த தானம் மற்றும் உடல் பரிசோதனை நடைபெற்றது.
இந்த முகாமைத் தொடங்கி வைத்து பேசிய வங்கியின் பொது மேலாளர் திருமதி புஷ்பலதா 1895 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி 130 ஆண்டுகளை கடந்தாலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதும் நாட்டில் கடை கோடி மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பதில்முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது என்பதை நினைவூட்டினார்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் பத்தாயிரம் மேற்பட்ட கிளைகளுடன் தமது வங்கி செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். தற்போது இந்த வங்கியில் 8 வங்கிகள் இணைக்கப்பட்டு ஒருமித்த கருத்துடன் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த ஒரு நாள் ரத்ததான முகாமில் வங்கியின் மண்டல துணை பொது மேலாளர் ராமானுஜ் பிரசாத் உள்ளிட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு இந்த முகாமை சிறப்பித்தனர்.