கோவை  கற்பகம் மருத்துவமனையின் சீறுநீரக மருத்துவர் ஜெரார்டு வினோத் பேட்

Loading

கோவை  கற்பகம் மருத்துவமனையின் சீறுநீரக மருத்துவர் ஜெரார்டு வினோத் பேட்டி
கோவை உலக சிறுநீரக தினமாக மார்ச் 14ம் தேதி அணுசரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் சிறுநீரகம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வுகளை இந்த மாதம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையினர் முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று கோவை உப்பிலியபாளையம் பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை கற்பகம் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் மருத்துவ கண்காணிப்பாளர் ரங்கநாதன், சிறுநீரக மருத்துவர் ஜெரார்டு வினோத், மருத்துவர் கார்த்திக்,மருத்துவர் சிவகுமார் ஆகியோர் கூட்டாக  கூறுகையில்
சிறுநீரகம் பாதிக்கபட்ட 38 வயதானவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நமது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு
 கிட்னிகளும் செயல் இழந்து டயாலிசிஸ் நிலையில் இருந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினரிடம் கூறிய பொழுது அவரது மனைவி அவருக்கு ஒரு சிறுநீரகம் தானம் அளிக்க முன் வந்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனை மருத்துவக்குழு அவர்கள் இருவருக்கும் பல்வேறு பரிசோதனைகள் செய்து பின்னர் நோயாளிக்கு நமது மருத்துவமனையில் கடந்த 10ம்தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு புதிய சிறுநீரகம் 100 சதவீகிதம் கச்சிதமாக பொருந்தி அவரது உடலில் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. நோயாளி தற்போது நல்ல நிலையில் உள்ளார். இது நமது மருத்துவமனையின் நற்பெயருக்கு மேலும் பெருமை அளித்துள்ளது என்றார். தொடர்ந்து தற்போது உடல் உறுப்புகளின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் பொதுமக்களுக்கு உடல் உறுப்புகள் தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு நோயாளிகளுக்கு தேவையான சிறுநீரகங்கள் கிடைப்பதில்லை. அதனால் நோயாளிகள் தனது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் நிலைக்கு தள்ள படுகின்றனர் எனவே பொதுமக்கள் உடல் உறுப்புகள் தானம் வழங்க முன்வர வேண்டும் என்றார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *