புத்தகத் திருவிழாவை வரவேற்கும் கீழக்கோட்டை பள்ளி மாணவர்கள்*
*புத்தகங்களுடன் சிவகங்கை 3 ஆவது புத்தகத் திருவிழாவை வரவேற்கும் கீழக்கோட்டை பள்ளி மாணவர்கள்*
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழக்கோட்டையில் வானவில் மன்ற அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகள் நடைபெற்றது. தலைமையாசிரியர் தெய்வானை தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். மாணவி கவியா வரவேற்றார். நுண்புழை ஏற்றம், கருப்பு பாம்பு, திரவங்களின் பாகுநிலை காணுதல் போன்ற அறிவியல் பரிசோதனைகளை வானவில் மன்ற கருத்தாளர் ஜெயபிரியா செய்து காண்பித்தார். மாணவ மாணவிகள் ஆர்வமுடன் ஆய்வுகளை தானே செய்து பார்த்தார்கள்.
சிவகங்கையில் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தக விழாவினை வரவேற்கும் விதமாக புத்தக வாசிப்பு நடைபெற்றது. தான் படித்த புத்தகம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. புத்தகம் வாசிப்போம் வாசிப்பை நேசிப்போம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு குடும்பத்துடன் சிவகங்கை புத்தக திருவிழாவில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.கணித பட்டதாரி ஆசிரியை மீனாட்சி, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் ராஜபாண்டி வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவன் கார்த்திக் நன்றி கூறினார்.