பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கல் !
*பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கல் !*
*”சென்னை பிரஸ் கிளப்” ‘Chennai Press Club” 425/2021 எனும் ஒரு குடை அமைப் பின் கீழ் அனைத்து பத்திரிகையாளர்களும் பத்திரிகையாளர் சங்கங்களும் இணைந்திருந்த காட்சியை மிக நீண்ட இடைவெளிக்கு பின் இப்போதுதான் காண முடிந்தது மகிழ்ச்சியை தந்தது!*
*பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கலாக இருக்க வேண்டிய ஒரு பத்திரிகையாளர் மன்றம் கடந்த பல வருடங்களாக சுயநலமிகள் சிலரின் கொட்டமடிக்கும் கூடாராமாகிப் போயிருந்தே என பல மூத்த பத்திரிகையாளர்கள் மனம் வெதும்பி உரைத்ததை கேட்கமுடிந்தது.*
*1996 ஆம் ஆண்டு ரூ.60 செலுத்தி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உறுப்பினரான நான் , மக்கள் செய்தி, தீக்கதிர், தமிழோசை, ஜனசக்தி நாளி தழ்களின் செய்தியாளராக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கல ந்து கொண்டிருப்பேன். எனது உறுப்பி னர் பதிவும் புதுப்பித்து தரப்படவில்லை;*
*2000 த்திலிருந்து தேர்தல் நடத்தப்படவும் இல்லை; புதிய உறுப்பினர்கள் சேர்க்கப் படவும் இல்லை.மூத்த பத்திரிகையாளர்கள் தினகரன் மோகன் உள்ளிட்டோர். தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வழக்குகள் தொடர்ந்தும், தடைகள் வாங்ப்பட்டு தள்ளி தள்ளி போடப்பட்டு, இன்று வரை நடத்தப்படவும் இல்லை. சமீபத்தில் கூட மூத்த பத்திரிகையாளர்கள் ஹிண்டு ராம், நக்கீரன் கோபால், அறம் சாவித்திரி கண்ணன் உள்ளிட் டோர் ஜனநாகமுறைப்படியான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.*
*பணம் புரளும் பிரஸ் மீட்டைத் தவிர எந்த ஒரு பத்திரிகையாளர்கள் கூட்டங்களோ கலந்துரையாடல்களோ சிறப்பு நிகழ்ச்சி களோ, பத்திரிகையாளர் நலன் காக்கும் நடைமுறைகளோ கூட அவ் அரங்கத்தில் நடந்ததாகவோ, நடக்க அனுமதிக்கப் பட்டதாகவோ அறியப்படவும் இல்லை!*
*2009 ல் புதுக்கட்டிடம் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தலை மையில் நடைபெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டு மூத்த பத்திரிகையா ளர்களாக ஹிண்டு ராம், இ.கோபால், மாலன், தேவகடாட்சம் உள்ளிட்டவர் களையெல்லாம் சந்தித்ததோடு சரி, அதற்கு பின்பு அப்படியான ஒரு சந்திப்பு இப்போதுதான் சாத்தியப் பட்டிருக்கிறது!*
*ஜன.12 அன்று நடைபெற்ற சென்னை பிரஸ் கிளப் பொங்கல் விழா நிகழ்ச்சியில் பழம்பெரும் “தி ஹிண்டு” தொழிற் சங்கத் தலைவர் இ.கோபால், அகில இந்திய பத்திரிகை ஆசிரியர் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் எஸ்.இரா சேந்திரன், தமிழ்நாடு பிரஸ்&மீடியா ரிப் போர்ட்டர்ஸ் யூனியன் தலைவர் திவான் மைதீன், ஆல் இண்டியா யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் அமைப்பின் பொதுச் செயலாளர் சாந்தகுமார், பத்திரிகையாளர் ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் செயலர் வஜ்ஜிரவேல், பத்திரிகை எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் இராமசுப்பிரமணியன்* *தமிழ்நாடு பத்திரிகை /ஊடகப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் இதழாளர் இசைக்கும் மணி மற்றும் “கட்டுமானத் தொழில்” ஆசிரியர் சிந்து பாஸ்கர், “உள்ளாட்சி டுடே” ஆசிரியர் ரவி, ஊடகவியலாளர்கள்அருண் அசோகன், அன்புகுமார், நெல்சன், போட்டோ திருநாவுக்கரசு மூத்த பத்திரிகையாளர்கள் சௌந்தரராஜன், மொய்தீன் கப்பார், நெல்லை கோபால், காந்தி கருணாநிதி உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்ததை காண முடிந்தது!*
*சென்னை பிரஸ் கிளப்பின் தலைவர் டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஏ.செல்வராஜ், துணைத் தலைவர் என்.செல்வராஜ், மதிப்புறு ஆலோசகர் புகாரி செரீப், செயலாளர் விமலேஸ்வரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் வரவேற்புரை தலைமையுரையாற்றி உறுப்பினர் அடையாள அட்டைகளையும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களையும் வழங்கி சிறப்பித்தனர்.* *துணைத் தலைவர் ராஜன்பாபு தேவகடாட்சம் நன்றியுரைத்து பேசினார். அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட 2024 ஆம் ஆண்டுக்கான முதல் நிர்வாகிகள் கூட்ட மும் சிறப்பாக நடந்தேறியது !*