வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா அவர்கள் (03.01.2024) அன்று செய்தியாளர் பயணத்தின்போது, நேரில் பார்வையிட்டார்.
நீலகிரிமாவட்டம்,கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜக்கனாரை ஊராட்சியில்
மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா அவர்கள் (03.01.2024) அன்று செய்தியாளர் பயணத்தின்போது, நேரில் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலன் கருதி, பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படைய வசதிகளான குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் “முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், (MGSMT) 2022-23ஆம் ஆண்டில் ரூ.33.60 கோடி மதிப்பில், 45 சாலை பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் ரூ.14.02 கோடி மதிப்பில் உதகை ஊராட்சி ஒன்றியத்தில் 13 பணிகளும், குன்னுர் ஊராட்சி ஒன்றியத்தில் 8 பணிகளும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 12 பணிகளும், கூடலுர் ஊராட்சி ஒன்றியத்தில் 12 பணிகளும் என மொத்தம் 45 பணிகள் எடுக்கப்பட்டு அவற்றில் 8 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள பணிகள் நடைப்பெற்று வருகிறது.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜக்கனாரை ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், நெக்கிகொம்பை புதுமந்து சாலை முதல் பன்னீர் சாலை வரை ரூ.81.99 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலைப்பணி பார்வையிடப்பட்டுள்ளது. பணியினை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறித்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், அனிதா, கோத்தகிரி வட்டாட்சியர் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.