டெல்லி நார்த் ஈஸ்ட் திருவிழாவில் ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி
டெல்லி நார்த் ஈஸ்ட் திருவிழாவில் ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி
நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்போடு இசையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட ‘மான்ஸ்டர் மெஷின்’ என்ற ஆல்பம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் டெல்லியில் வருடம்தோறும் நடைபெறும் ‘நார்த் ஈஸ்ட்’ திருவிழாவில் அவர் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை வெளிப்படுத்தும் நிகழ்வாக இந்த விழா நடைபெறுகிறது. வரும் 22-ல் இருந்து 24-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் 23-ம் தேதி தனது குழுவினருடன் ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
மேடையில் நிகழ்ச்சி நடத்துவதை ஸ்ருதி எப்போதும் விரும்புவார். லண்டனில் பல முக்கியஅரங்குகளில் அவர் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இப்போது டெல்லியில் நடத்துவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளத