காட்பாடியில் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.
காட்பாடியில் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.
வேலூர் டிசம்பர் 7
வேலூர் மாவட்டம் மத்திய திறனூக்க செயலகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய மின் சிக்கன நாள் மற்றும் வார விழாவில் ஏற்கனவே பள்ளிகளில் வேலூர் மாவட்டத்தில் 30 பள்ளிகளில் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு பற்றிய பேச்சு போட்டி ,கட்டுரை போட்டி ,ஓவியப்போட்டி ,வினாடி வினா போட்டி நடைபெற்று ஒரு பள்ளிக்கு 2 போட்டிகள் நடத்தி அப்பள்ளியில் ஒரு போட்டிக்கு மூன்று பேர் வீதம் முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு மொத்தம் இரண்டு போட்டிகளில் ஆறு நபர்கள் தேர்ந்தெடுத்து மாவட்ட அளவில் 30 பள்ளிகளில் 180 மாணவ மாணவிகளுக்கு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பரிசளிப்பு பாராட்டு விழா நடைபெற்றது இவ்விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளர்க.விஸ்வநாதன் அனைவரையும் வரவேற்றார். விழாவை வேலூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் டா.சாந்தி தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு கேடயத்தையும் சான்றும் புத்தகமும் வழங்கி சிறப்புரையாற்றினார்.விழாவில் உதவிசெயற்பொறியாளர்கள் கங்கா மற்றும் லாவண்யா தமிழ்நாடு அறிவியல் இயக்க துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் கருத்தாளர் எம்.ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வாழ்த்தி பேசினர்.
இறுதியாக காட்பாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜி.டி.பாபு நன்றி கூறினார்.