ஹூமா குரேஷி எழுதிய பேன்டஸி நாவல்
ஹூமா குரேஷி எழுதிய பேன்டஸி நாவல்
இந்தி நடிகையான ஹுமா குரேஷி, பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’, ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வலிமை’ படங்களில் நடித்தார். வெப்தொடர்களிலும் நடித்து வரும் இவர், நாவல் ஒன்றை எழுதியுள்ளார். ‘ஸெபா: அன் ஆக்சிடெண்டல் சூப்பர் ஹீரோ’ (Zeba: An Accidental Superhero’) என்ற இந்த நாவல் பெங்களூரு இலக்கிய திருவிழாவில் வெளியிடப்பட்டது.
இது பற்றி ஹுமா குரேஷி கூறும்போது, “இது ஃபேன்டஸி பிக்ஷன் நாவல். 1992-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை நடக்கும் கதையை கொண்டது. ‘ஸெபா’ என்ற பெண்ணைப் பற்றிய கதை. ‘லீலா’ என்ற வெப் தொடரில் நடித்துக்கொண்டிருந்த போதுதான் இந்த நாவலுக்கான எண்ணம் தோன்றியது. பிறகு கரோனா காலகட்டத்தில் எழுத தொடங்கினேன். இதை டி.வி.சீரியலாக உருவாக்க நினைத்தேன். முடியவில்லை. என்றாவது ஒருநாள் இந்த நாவல் திரைப்படமாகும் என்று நம்புகிறேன். நான் கலைஞர். என் கலையை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறேன். நடிப்போ, எழுத்தோ, என் படைப்பு மனதை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவே இவற்றைக் கருதுகிறேன்” என்றார்.