காதலில் உருகிய கார்த்திகா

Loading

காதலில் உருகிய கார்த்திகா
80 கால கட்டத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ராதா. மும்பை தொழில் அதிபருடன் திருமணமாகி இவருக்கு கார்த்திகா, துளசி ஆகிய மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகா ‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். சினிமா வாய்ப்புகள் போதிய அளவு இல்லாததால் சினிமாவில் இருந்து விலகி தந்தையுடன் இணைந்து பிசினசில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் கடந்த மாதம் கார்த்திகாவுக்கு ரோகித் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த புகைப்படங்களை கார்த்திகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். தற்போது வருங்கால கணவரான ரோகித்துடன் இணைந்து எடுத்த ரொமான்ஸ் புகைப்படங்களை வலை தளங்களில் கார்த்திகா பதிவிட்டுள்ளார். புகைப்படத்துடன் “உன்னை சந்திக்க வேண்டும் என்று விதி எழுதப்பட்டுள்ளது. உன்னை விரும்பியது ஒரு மேஜிக்காக நிகழ்ந்தது. உன்னுடன் இணைந்து பயணிப்பதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
கார்த்திகா- ரோகித் திருமணம் வருகிற 19-ந்தேதி காலை திருவனந்தபுரத்தில் நடக்கிறது. ராதாவுக்கு சொந்தமான ஓட்டலில் நடைபெறும் திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *