தமிழ்நாடு பதிவுத்துறையில் மறைமுக கூடுதல் கட்டண வேட்டை

Loading

 தமிழ்நாடு பதிவுத்துறையில் மறைமுக கூடுதல் கட்டண வேட்டை கணினி குளறுபடியா அல்லது மக்களை ஏமாற்றும் செயலா?
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பதிவுத்துறையில் பொது அதிகார ஆவணங்களை பதிவு செய்யும் கட்டணங்களில் தற்போது ஏற்பட்டிருக்கும் குளறுபடியை உடனடியாக சரி செய்ய தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.
பொதுவாக சொத்துக்களை விற்பனை செய்ய சொத்தின் முதல்வரால் பொது அதிகார முகவராக குடும்ப உறுப்பினர் அல்லாத மூன்றாம் நபரை நியமிக்க முத்திரை தீர்வை கட்டணம் ரூபாய் 100 எனவும், சந்தை மதிப்பில் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் எனவும், அதேபோன்று குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கும் பொது அதிகார ஆவணத்திற்கு முத்திரை தீர்வை கட்டணம் ரூபாய் 100 எனவும், பதிவு கட்டணம் ரூபாய் 2000 எனவும், அதேபோன்று விற்பனையை தவிர்த்து பிற செயல்பாடுகளுக்கு அதிகாரம் வழங்கும் பொது அதிகார ஆவணத்திற்கு முத்திரை தீர்வை கட்டணம் ரூபாய் 100 எனவும், பதிவு கட்டணம் ரூபாய் 500 எனவும் நிர்ணயம் செய்து கடந்த 10/07/2023 முதல் பதிவுத்துறை மேற்கண்ட வகையில் கட்டணத்தை உயர்த்தி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
ஆனால் இதற்கு மாறாக பதிவு அலுவலகங்களில் பொது அதிகார ஆவணங்களை பதிவு செய்ய முத்திரை தீர்வை கட்டணம் ஒரு சதவீதம் எனவும், பதிவு கட்டணம் ஒரு சதவீதம் எனவும் பதிவுத்துறை இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சார் பதிவாளர்களும் பொதுமக்களும் மிகுந்த குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திட்டமிட்டபடி பதிவு பணியை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பதிவு கட்டண விதிக்கு முரணாக முத்திரை தீர்வை கட்டணத்தையும் பதிவு கட்டணத்தையும் தலா ஒரு சதவீதம் செலுத்தி பதிவு செய்துள்ளனர்.
பதிவுத்துறை நிர்வாகம் இதனை கூடுதல் கவனத்தில் கொண்டு விரைவாக பதிவுத்துறை இணையதளத்தில் ஏற்பட்டிருக்கிற கோளாறுகளையும் கட்டண குளறுபடிகளையும் சரி செய்து, கூடுதலாக முத்திரை தீர்வை கட்டணத்தை விதிக்கு முரணாக இணையதள கோளாறு மற்றும் குளறுபடி காரணமாக பதிவு கட்டண விதிக்கு மாறாக கூடுதலாக வசூலித்த தொகையை சம்பந்தப்பட்ட ஆவணதாரர்களுக்கு திருப்பி ஒப்படைப்பதற்கு வழிவகை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *