அரசு பேருந்தும் பயணிகள் அலைமோதும் கூட்டமும்
அரசு பேருந்தும் பயணிகள் அலைமோதும் கூட்டமும்
சென்னையில் பொதுவாக மூன்று நாள் தொடர் விடுமுறை என்றாலே மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு போவது வழக்கம் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அரசு பேருந்து ஆயிரம் இரண்டாயிரம் என பஸ் விடுகிறோம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் அறிக்கை விட்டு விடுகிறார் ஆனால் அந்த பஸ் நன்றாக இருக்கிறதா பஸ் உள்ளே சுத்தமாக இருக்கிறதா டயர் நன்றாக இருக்கிறதா என்று அமைச்சர் முதல் அதிகாரி வரை கவனிப்பது இல்லை இதனால் தான் பாதி வழியிலே நிற்பதும் விபத்துக்குள்ளாகும் வாடிக்கையாக உள்ளது அப்படி நிற்கும் பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளை பின்னால் வரும் பஸ்ஸில் ஏறப்போனால் ஏற்றுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் தற்பொழுதே சிறப்பு பேருந்தை சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்தால் தீபாவளி பண்டிகைக்கு வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் நிம்மதியாக ஊர் போய் சேர்வார்கள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெறும் அறிக்கையை மட்டும் வெளியிடுவதை விட்டுவிட்டு அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு அந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்தால் மட்டுமே அந்தத் துறை செம்மையாக செயல்படும் என்று கூறுகின்றனர் வெளியூர் செல்லும்
பேருந்தில்பயணிக்கும் பயணிகளை காப்பது ஒரு அரசின்கடமையாகும் ஆகவே இதில் அலட்சியம் காட்டாமல் தீபாவளிக்கு முன்னரே விரைந்து செயல்பட்டால் மக்கள் கோபத்திற்கு ஆளாகாமல் தவிர்க்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து
பார்ப்போம்