எனது மண், எனது நாடு என்ற இயக்கம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது

Loading

தேசத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த ‘வீரர்களை’ கௌரவிப்பதற்காக நாடு தழுவிய ‘‘எனது மண், எனது நாடு” என்ற இயக்கம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது


நாடு முழுவதும் 3800 இடங்களில் “எனது மண், எனது நாடு” நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

 PIB Chennai

அமிர்த கலச யாத்திரைகளுடன் “எனது மண், எனது நாடு” என்ற  நாடு தழுவிய இயக்கம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மக்கள் சந்திப்பு முன்முயற்சி நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிடத்தக்கக் கூட்டு முயற்சியில், பல அமைச்சகங்கள், மாநில அரசுகள், நேரு யுவகேந்திரா, மண்டல கலாச்சார மையங்கள், மத்திய ஆயுதப் போலீஸ் படைகள், இந்திய அஞ்சல் துறை, நிலக்கரித் துறை ஆகியவை கிராமங்கள் மற்றும் வட்டார அளவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மண்ணை சேகரிக்கும் மகத்தான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தக் கூட்டு முயற்சி  லட்சிய இலக்கை அடைவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டுகிறது. சமூக சேவை மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. கலாச்சார அமைச்சகத்தின் மண்டல கலாச்சார மையங்கள் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் இந்த இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிறந்த முறையில் சென்றடையவும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. 3800 க்கும் மேற்பட்ட வட்டாரங்கள் ஏற்கனவே எனது மண், எனது நாடு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. மேலும் பொதுமக்களின் பங்கேற்பு அபரிமிதமாக உள்ளது.

அமிர்த கலச யாத்திரைகள் ஆக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் தில்லியில் ஒரு பிரமாண்ட விழாவில் கடமைப் பாதையில் அதன் இறுதிக்கட்டத்தை அடையும். இந்த நாடு தழுவிய முன்முயற்சியின் மகத்தான இறுதி நிகழ்வின் போது, நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைக் குறிக்கும் ஒரு நினைவுச்சின்ன கலசம், நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண்ணைக் கலப்பதற்காக வைக்கப்படும். மேலும் அமிர்தத் தோட்டம் மற்றும் அமிர்தப் பெருவிழா நினைவுச்சின்னத்தில் சம்பிரதாயபூர்வமாக வைக்கப்படும். இந்தக் கொண்டாட்டம் துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் வசீகரிக்கும் ஒளி,ஒலி நிகழ்ச்சிகளால் செறிவூட்டப்படும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *