விற்கப்படாத மனைகளின் பரப்பளவு 50000 சதுர அடிக்கு மேல் இருந்தால் கட்டாயமாக திறந்தவெளி நிலம்(OSR) 10 சதவீதம் ஒதுக்கிட வேண்டி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம்.

Loading

கில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்-  தேசிய தலைவர் ஆ ஹென்றி  அவர்கள்  விற்கப்படாத மனைகளின் பரப்பளவு 50000 சதுர அடிக்கு மேல் இருந்தால் கட்டாயமாக திறந்தவெளி நிலம்(OSR) 10 சதவீதம் ஒதுக்கிட வேண்டி
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர் அவர்களுக்கு
கடிதம்.

தமிழகத்தில் கடந்த 20/10/2016 க்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட அங்கீகாரம் இல்லாத பட்டா வீட்டுமனைப் பிரிவுகளை மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போது, இதில் விற்கப்படாத மனைகளின் (Unsold) பரப்பளவிற்கு திறந்தவெளி நிலம் 10 சதவிகிதம் ஒதுக்கிட வேண்டும்.

விற்கப்படாத மனைகளின் பரப்பளவு மிகக் குறைவாக இருக்குமானால் அதற்கு ஈடாக பத்து சதவிகிதம்   திறந்தவெளி நிலத்தை ஒதுக்குவதன் மூலம் எந்த வகையிலும் யாருக்கும் பயன் தராது.
அதேசமயம் ஒரு 5000 சதுர அடிக்கு மேல் திறந்தவெளி நிலத்தை ஒதுக்கினால் பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்கு மிகவும் அது பயனுள்ளதாக அமையும்.

ஆகவே விற்கப்படாத மனைகளின் பரப்பளவு குறைந்தபட்சம் 50 ஆயிரம் சதுர அடிக்குள் இருக்கும் பட்சத்தில் இதற்கான திறந்தவெளி நிலம் ஒதுக்கீடு 10 சதவிகிதத்திற்கு ஈடாக கட்டணமாகவோ அல்லது நிலமாகவோ பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கும் வகையிலும், விற்கப்படாத மனைகளின் பரப்பளவு 50 ஆயிரம் சதுரடிக்கும் மேல் இருக்கும் பட்சத்தில் கட்டாயமாக திறந்தவெளி நிலம் 10% ஒதுக்கிட வேண்டும் என்ற வகையிலும் தாங்கள் வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *