ஒற்றைச் சாளர(SiNGLE WINDOW SYSTEM) முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் இறுதி ஒப்புதல் வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்-  தேசிய தலைவர் ஆ ஹென்றி அவர்கள் ஒற்றைச் சாளர(SiNGLE WINDOW SYSTEM) முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் இறுதி ஒப்புதல் வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம்.

தமிழகத்தில் மாநிலம் முழுவதும் நகர் ஊரமைப்பு இயக்குனரகம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சிக்கு உட்பட்ட ஊராட்சி  ஒன்றிய அலுவலகங்களிலும்  ஒற்றை சாளர முறையில் இதுவரை 24 துறைகளை ஒருங்கிணைத்து (Single Window System) மிக விரைவாக கட்டிட திட்ட அனுமதி, மனைப் பிரிவு மற்றும் மனை உட்பிரிவு அனுமதி மற்றும் நில வகைபாடு மாற்றம் உள்ளிட்ட அனுமதிகளை மிக விரைவாக வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது.

அதே சமயம் மேற்கண்ட அனுமதிகளுக்கு இறுதி ஒப்புதல் வழங்கும் அதிகாரம் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், ஊரக உள்ளாட்சி பகுதிகளில், ஊராட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
இறுதி ஒப்புதல் வழங்கும் விஷயங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடு ஆட்சிக்கும் அரசுக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் விதத்தில் அமைவதோடு, விண்ணப்பதாரர்களிடம் அவர்கள் கேட்கும் கையூட்டு மற்றும் அவர்கள் விண்ணப்பதாரர்களிடம் நடந்து கொள்ளும் விதம், விண்ணப்பதாரர்களை நடத்தும் விதம் அனைத்தும் விவரிக்க முடியாத வேதனையை அளிக்கிறது.

ஆகவே உள்ளாட்சித் துறைகளையும் ஒற்றைச்சாளர முறையில் இணைத்து இறுதி ஒப்புதல் வழங்குவதற்கு அதிகபட்சமாக 15 தினங்கள் என்கிற ஒரு கால அவகாசத்தை நிர்ணயம் செய்து, ஒருவேளை உள்ளாட்சி பிரதிநிதிகள் அதற்குள் இறுதி ஒப்புதல் வழங்கவில்லை எனில் 15 தினங்களுக்கு பிறகு (Automatic Approval) தாமாக அனுமதி வழங்கியதாக கருதும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொண்டு அரசாணை வெளியிடுவதற்கும்
தாங்கள் வழிவகை செய்ய வேண்டும்இவ்வாறு  கடிதத்தில் கூறியுள்ளார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *