ஆறு மாத கால நீட்டிப்பு வேண்டி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர் அவர்களுக்கு  கடிதம்.

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் ஆ .ஹென்றி அவர்கள் மலைபகுதிகளில்(HACA) மனை வரன்முறை சட்டத்தை மேலும் ஆறு மாத கால நீட்டிப்பு வேண்டி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர் அவர்களுக்கு  கடிதம்.

தமிழகத்தில் கடந்த 20/10/2016 க்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட அங்கீகாரம் இல்லாத பட்டா வீட்டு மனைப் பிரிவுகளையும், தனி மனைகளையும், மனை வரன்முறை சட்டம் 2017 இன் கீழ் விண்ணப்பித்து டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அனுமதி பெறும் வகையில் தமிழக அரசு  மனை வரன்முறை சட்டம் 2017 அரசாணை எண். 78 மற்றும் 172 ஆக வெளியிட்டு அனுமதி பெறும் வகையில் வழிவகை செய்தது. மேலும் மூன்று முறை கால நீடிப்பு செய்தது. தற்பொழுது மேலும் ஆறு மாத காலம் நீடிப்பும் செய்துள்ளது. இது வரவேற்கத்தக்கது பாராட்டுதலுக்குரியது.

அதேபோன்று தமிழகத்தில் மாநிலம் முழுவதும் 25 மாவட்டங்களில் மலைப்பகுதிகள் அமைந்துள்ளது. இதன் அருகில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீட்டுமனை பிரிவுகளையும் தனி மனைகளையும் வாங்கி வைத்துள்ள பொதுமக்களுக்கு தங்களின் பட்டா மனைகளை மனை வரன்முறை சட்டத்தின் கீழ் DTCP அங்கீகாரம் பெறும் வகையில், கடந்த 30.03.2020 அன்று தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
“மலைப்பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத  மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்துதல் சட்டம் 2020”, அரசாணை எண். 66/2020 ஆக வெளியிட்டு ஒரு ஆறு மாத காலம் மட்டுமே மேற்கண்ட மலைப்பகுதிகளில் மனைகளை வாங்கி வைத்துள்ள பொதுமக்கள் அனுமதி பெறும் வகையில் ஒருமுறை மட்டுமே வாய்ப்பினை வழங்கியிருந்தது.

இந்த காலகட்டம் கொரோனா பேரிடர் காலகட்டம் என்பதால் பொதுமக்கள் பெருமளவில் வெளியில் வருவதற்கே அஞ்சிய காலகட்டம் ஆகவே இதில் எண்ணற்ற பொதுமக்கள் கொரோனா பயத்தினாலும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும் தங்களின் பட்டா மனைகளை அனுமதி கோரி விண்ணப்பிக்க தவறவிட்டனர்.

ஆகவே பெருமதிப்பிற்குரிய நகர் ஊரமைப்பு இயக்குனர் அவர்கள் இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, மேற்கண்ட மலைப்பகுதிகளில் மனைகளை வாங்கி வைத்துள்ள பொதுமக்களும் தங்களின் பட்டா மனைகளை மனை வரன்முறை சட்டத்தின் கீழ் DTCP அனுமதி பெறுவதற்கு மேலும் ஆறு மாத காலம் கால நீடிப்பு செய்து ஒரு வாய்ப்பினை வழங்கிட தாங்கள் வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *