குப்பையில்லா இந்தியா
தூய்மையே சேவை 2023
15.09.2023 முதல் 25.09.2023 வரையிலான சாதனைகள்
“குப்பையில்லா இந்தியா” என்ற கருப்பொருளில் தூய்மையே சேவை 2023 இயக்கம் 2023, செப்டம்பர் 15 அன்று மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டு சமூக ஈடுபாட்டுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் முதல் வாரத்தில் இளைஞர்கள் தலைமையிலான தூய்மை இயக்கங்கள், சுவர் ஓவியங்கள், துப்புரவு பணியாளர்களுக்கான சுகாதார முகாம்களை ஏற்பாடு செய்தல், பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தூய்மை உறுதிமொழிகளை எடுத்தல் போன்ற பல நடவடிக்கைகள் அடங்கும். இயக்கத்தின் முக்கிய நடவடிக்கையான வழக்கமான பொதுமக்கள் தூய்மை பணிகளுடன் இந்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
25.09.2023 அன்று தூய்மையே சேவை இணையதளத்தின் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இயக்கத்தின் சாதனைகள் பின்வருமாறு:
இந்த இயக்கத்தின் கீழ் மொத்தம் 12,01,397 பேர் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர். 4,35,098 பேர் தன்னார்வ நடவடிக்கைகளிலும், 2,59,872 பேர் உறுதிமொழிகள் மற்றும் பேரணிகள் போன்ற பொதுமக்கள் தொடர்பான நடவடிக்கைகளிலும் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 21,780 நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டன. 72 கடற்கரைகள். 151 ஆற்றங்கரைகள் மற்றும் கரையோரங்கள், 236 பாரம்பரிய கழிவு தளங்கள், 76 சுற்றுலா / தனித்துவ இடங்கள், 3,491 பொது இடங்கள், 381 நீர்நிலைகள், 1703 நிறுவன கட்டிடங்கள், 1961 குப்பைகளால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் 96 சமூக தூய்மை வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 1666 தூய்மை உறுதிமொழிகள், 151 தூய்மை ஓட்டங்கள், 9 சிறப்பு கிராம சபைகள், 44 மனித சங்கிலிகள் மற்றும் பல்வேறு பிரிவு மக்களுடன் 167 கூட்டங்கள் ஆகியவையும் நடத்தப்பட்டன. இறுதியாக, இந்த இயக்கத்தின ஒரு பகுதியாக மொத்தம் 37,62,851 மனித மணிநேரங்கள் செலவிடப்பட்டுள்ளன.
புதுச்சேரி
இதேபோல் புதுச்சேரியில் துாய்மையே சேவை திட்டத்தின் கீழ் நொணாங்குப்பத்தில் படகு இல்லங்கள் போன்ற சுற்றுலா தலங்களில் குப்பைகளை அகற்றுதல் பணியில் பேரவைத் தலைவர் திரு ஏம்பலம் செல்வம், ஊரக வளர்ச்சித் துறை செயலர், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் புதுச்சேரி முன்னாள் படைவீரர் கழகத்தினர் ஆகியோர் பங்கேற்றது பாராட்டுக்குரியது.
சுற்றுலாத் தலமான நொணாங்குப்பம் படகு இல்லத்தின் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதும், அருகிலுள்ள நீர்நிலைகளின் தூய்மையை உறுதி செய்வதும் இந்த முன்முயற்சியின் முதன்மை நோக்கமாகும். தூய்மையே சேவை” க்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்வது, அனைவருக்கும் சிறந்த வாழ்க்கைச் சூழலை ஊக்குவித்தல், தூய்மை மற்றும் சுகாதார முயற்சிகளுக்கு தீவிரமாக பங்களிப்பதற்கான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. நொணாங்குப்பம் பகுதியில் உள்ள படகு இல்லங்களில் குவிந்துள்ள குப்பைகளை கண்டறிந்து அகற்ற அரசு அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர். உள்ளூர் சமூக உறுப்பினர்கள் என, பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.