அகிலஇந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கடலூர் மண்டல சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 

Loading

அகில

இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கடலூர் மண்டல சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 

விழுப்புரம் செப்டம்பர்:25
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கடலூர் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநில பொருளாளர் ஜெய்சங்கர் தலைமையில் விழுப்புரம் தனியார் மண்டபத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் ஹென்றி  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் விழுப்புரம் மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மனை பிரிவு மற்றும் கட்டிட திட்ட அனுமதிகள் சம்பந்தமாக சந்தேகங்களுக்கு பதில் அளித்தார் கூட்டமைப்பின் தேசிய துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை நிலைய செயலாளர் கார்த்திக் ,மாநில இணை செயலாளர் ராஜா என்கிற பகுருதீன் அலி ,மாநில பொருளாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் முன்னிலை வகித்தனர். மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அனுமதி கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் மீது கடந்த அக்டோபர் 2016 முன்பாக விற்கப்பட்ட மனை பிரிவா என்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் அது குறித்த தகவல் பெற்று தரக்கோரி விண்ணப்பதாரர்களை அலைக்கழிக்காமல் டி  டி  சி பி அலுவலகம் மூலம் நேரடியாக பதிவுத்துறை இணையதளம் வாயிலாக உள்ளீடு செய்து பார்வையிட்டு உறுதி செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட பதிவு அலுவலகத்தில் மட்டும் அது குறித்து தகவலை பெற்று அனுமதி வழங்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும், கட்டிடத் திட்ட அனுமதியில் அனுமதிக்கப்பட்ட தள பரப்பளவை அடையும் வகையில் தமிழ்நாடு ஒருங்கிணைத்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் மனை பிரிவு நில வகைப்பாடு மற்றும் கட்டிட திட்ட அனுமதியை பெறுவதற்கு தற்போது 28க்கும் மேற்பட்ட துறைகளை அணுக வேண்டியுள்ளது இதில் சுமார் 24 துறைகள் ஒற்றை சாளர  முறையில் இணைக்கப்பட்டு இருந்தாலும் தாமாக கோப்புகள் நகர்வதில்லை ஒற்றை சாளர முறையில் வீண் அலைச்சல் மன உளைச்சல் நேர காலம் வீண் விரயம் ஏதுமின்றி மேற்கண்ட அனுமதிகளை விரைவாக வழங்க வேண்டும் மற்றும் கிராம நத்தம் வகைப்பாடு உள்ள மனைகளை எவ்வித நிபந்தனையும் இன்றி தங்கு தடை இன்றி பதிவு செய்ய வேண்டும் விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட கடலூர் மண்டல பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத மனைகளாகவும் 5 சென்ட் மட்டும் பத்து சென்ட் நிலம் ஆகும் மனையாகவும் இதுவரை பதிவு செய்த ஆவணங்களை மறுவரையறை செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் வங்கி கடன் பெற தனிமையாக டிடிசிபி அங்கீகாரம் பெறும் வகையில் அரசு வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *