இந்திய வேளாண் துறையை வலுப்படுத்தும் பிரதமரின் வேளாண் வள மையங்கள் (பிஎம்கேஎஸ்கே)

Loading

இந்திய வேளாண் துறையை வலுப்படுத்தும் பிரதமரின்

வேளாண் வள மையங்கள் (பிஎம்கேஎஸ்கே)

டாக்டர் மன்சுக் மாண்டவியா,
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்

2022-23-ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, நாட்டின்
மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் கிராமப்புறங்களில்
வசிப்பதாகத் தெரியவந்துள்ளது. அதில் 47 சதவீத மக்கள்
வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியுள்ளனர். உற்பத்தியையும்
உற்பத்தித்திறனையும் அதிகரிக்க சரியான நேரத்தில், சரியான
வேளாண் இடுபொருட்களை இட வேண்டிய ஒரு
காலவரையறைக்குட்பட்ட நடைமுறையே விவசாயத்தில் மிக
முக்கியமானதாகும். வேளாண் இடுபொருட்கள் மற்றும் விவசாயம்
தொடர்பான சேவைகளின் திறமையான விநியோக முறை
விவசாயிகளின் வருமான அதிகரிப்பில் மிக முக்கியப் பங்கு
வகிக்கிறது.

நாட்டில் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் வேளாண்
கருவிகளுக்கு தனித்தனி விற்பனைக் கட்டமைப்புகள் உள்ளன. மேலும்,
மண், விதை, உரங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த பல்வேறு
திட்டங்கள் குறித்த தகவல்கள், பல்வேறு முகமைகள் மூலம்,
விவசாயிகளை சென்றடைகின்றன. இந்த தனித்தனியான
அணுகுமுறை, விவசாயிகளுக்கு அறிவார்ந்த முடிவுகளை
எடுப்பதற்கான தொழில்நுட்ப அடிப்படையிலான முழுமையான
தகவல்களை வழங்கத் தவறுகிறது.

ஒரே குடையின் கீழ் விவசாயிகளுக்கு முழுமையான தேவைகளை
நிறைவேற்றுவதில்தான் சிறந்த தீர்வு ஏற்படும். இதன் அடிப்படையில்,
விவசாயிகள் அதிகம் வந்து செல்லும் உர சில்லறை விற்பனை
கடைகளை பிரதமரின் வேளாண் வள மையங்களாக (பிரதான் மந்திரி
கிசான் சம்ரிதி கேந்திரா – பி.எம்.கே.எஸ்.கே) மாற்றி, விவசாயிகளின்
தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடைமுறைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் திரு நரேந்திர மோடி
தலைமையிலான மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம்,
நாட்டின் விவசாயத் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும்
வேளாண் வளர்ச்சியை அதிகரிக்கும் தொலைநோக்குப் பார்வையுடன்,
இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 2,80,000 சில்லறை உரக் கடைகள்
விவசாயிகளுக்கான விரிவான சேவை மையங்களாகப் படிப்படியாக
மாற்றப்பட்டு வருகின்றன. உரங்கள், விதைகள். பூச்சிக்கொல்லிகள்,
சிறிய பண்ணை இயந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட பல்வேறு
வகையான வேளாண் பொருட்களை விவசாயிகளுக்கு ஒரே
இடத்தில் வழங்குவதில் இந்த பிரதமரின் வேளாண் வள மையங்கள்
முன்முயற்சி கவனம் செலுத்துகிறது. இதில் உரங்கள் மற்றும்
பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதற்கான ட்ரோன் சேவைகளும் அடங்கும்.
இதன் மற்றொரு முக்கிய அம்சம் மண் மற்றும் விதைப் பரிசோதனை
வசதியை வழங்குவதாகும். விவசாயிகளுக்கு குறிப்பிட்ட மண் மற்றும்
பயிர் நிலைமையைப் பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம்,
சிறந்த முடிவுகளை எடுக்கவும், அதிக மகசூல் பெறவும் வாய்ப்பு
ஏற்படும். இது துல்லியமான வேளாண்மை முறைகளை
ஊக்குவிக்கிறது. மேலும், இந்த மையங்கள் அறிவு மையங்களாக
செயல்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் குறித்த முக்கியமான
தகவல்களைப் பரப்புகின்றன. தகவல் இடைவெளியைக் குறைப்பதன்
மூலம், இந்த மையங்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கின்றன.

இதன் மூலம் அவர்களின் செயல்திறன் மற்றும் வருமானம்
அதிகரிக்கிறது.

கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதே
இத்திட்டத்தின் நோக்கம். இந்த முன்முயற்சி சிறந்த விவசாய உற்பத்தி
மற்றும் ஒட்டுமொத்த விவசாயிகளின் செழிப்பை உறுதி செய்யும்.

அண்மையில் வரும் தகவல்கள் இந்த பிரதமரின் வேளாண் வள
மையங்களின் வெற்றியை நிரூபிக்கின்றன. 27-07-2023 அன்று
ராஜஸ்தானின் சிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் 1,25,000
பிரதமரின் வேளாண் வள மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த மையங்களுக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை ஏற்கனவே
15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், இந்த
மையங்களால் ஏற்படும் பலன்களால் அவர்கள்
மகிழ்ச்சியடைவதாகவும் சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மையங்கள் மூலம் நானோ யூரியா விற்பனையும்
நடைபெறுகிறது.

விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதிலும், நாட்டின் முதுகெலும்பான
பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் இந்த பிரதமரின் வேளாண்
வள மையங்கள் திட்டம் ஒரு முக்கிய அம்சமாகத் திகழ்கிறது என்பது
நிரூபிக்கப்பட்டுள்ளது. விவசாய இடுபொருட்கள் மற்றும் அது
தொடர்பான தகவல்களை எளிதாக்குவதன் மூலமும், நவீன
தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அளிப்பதன் மூலமும்,
நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலமும், பிரதமரின்
வேளாண் வள மையங்கள், விவசாயிகளுக்கு வளத்தை நோக்கிய
புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகின்றன. அரசின் உறுதியான
ஆதரவு மற்றும் அனைத்துத் தரப்பினரின் கூட்டு முயற்சிகளுடன்,
பிரதமரின் விவசாயிகள் வள மையங்கள் தொடர்ந்து நேர்மறையான

மாற்றத்தை ஏற்படுத்தி, தற்சார்பு விவசாயத்தை ஊக்குவிக்க சிறந்த
பங்களிப்பை வழங்கும் என்பது உறுதி.
***************

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *