அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் மதுரை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் மதுரை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மதுரை சர்வேயர் காலனி 120 அடி சாலையில் அமைந்துள்ள டெம்பிள் சிட்டி ஹோட்டலில் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயபாரதி அவர்களின் தலைமையில் 25/06/2023 அன்று நடைபெற்றது.
தேசிய துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் அனைவரையும் வரவேற்றார்.
மாநில இணைச் செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர். ஆ. ஹென்றி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக தேசியச் செயலாளர் ஜெயச்சந்திரன், அமைப்புச் செயலாளர் நேரு நகர் நந்து, துணைத் தலைவர் செந்தில்குமார், தலைமை நிலையச் செயலாளர் கார்த்திக், செய்தி தொடர்பாளர் பொன்குமார், மேலாளர் சிவகுமரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இக்கூட்டத்தில் மனை வரன்முறை சட்டத்தை கால நீட்டிப்பு செய்ய வேண்டும், புதிய வீட்டுமனை பிரிவிற்கான அணுகு சாலை அளவை குறைக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் கட்டிட திட்ட அனுமதி பெறுவதற்கு கால நேரமும் வீண் விரையமும் ஏற்படுவதை அரசு கவனத்தில் கொண்டு விரைந்து ஒற்றைச் சாளர முறையில் லஞ்சம் லாவண்யம் ஏதுமின்றி பொதுமக்களுக்கு கட்டிட அனுமதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
பதிவுத்துறையில் இருக்கின்ற பல்வேறு பிரச்சனைகளை களைய வேண்டும்,
மனை மற்றும் கட்டிட திட்ட அனுமதி உட்பிரிவு நில வகைபாடு மாற்றம் உள்ளிட்டவற்றில் ஏற்படுகின்ற காலதாமதங்களை தவிர்த்து சிக்கல்களை களைந்து விரைவில் அனுமதி கிடைக்கும் வகையில் அரசு வழி வகை செய்ய வேண்டும், வழிகாட்டி மதிப்பில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன இந்த தீர்மானங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தனர் .