தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் மாநிலத் தலைவராக எஸ்.கே. கங்கா தேர்வு! 

Loading

தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் மாநிலத் தலைவராக எஸ்.கே. கங்கா தேர்வு!

திருப்பூர்:  தமிழ்நாடுகலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவ ராக குமரி மாவட்டத்தின் எஸ்.கே. கங்கா திருப்பூரில் நடைபெற்ற மாநில செயற்குழு மற்றும் மாநிலக் குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். மாநில துணைச் செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்களும் தேர்வு செய்ய ப்பட்டு மாநில குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தொழில் நகரில் ராயபுரத்தில் உள்ள ஹோட்டல் எம். கே. எம் ரிச் அரங்கில் ஜூன் 17 ,18 அன்று தமிழ்நாடு கலை இலக்கிப்  பெரும் மன்றத்தின் மாநில செயற் குழு மற்றும் மாநிலக் குழு கூட்டம் மற்றும் இலக்கிய விருதுகள் வழங் கும் விழா ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் கட்டுப்பாட்டு குழுத் தலைவரும், என்.சி.பி .ஹெச் சின் மேலாண்மை இயக்குனருமான க. சந்தானம் தலைமையில் நடைபெற்றது.
கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மருத்து வர் த. அறம் , துணைத்தலைவர் எல்லை.சிவக்குமார், பொருளாளர் ப.பா. ரமணி மற்றும் செயற்குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த கூட்டத்தில், மாநிலத் தலைவர் மாநில துணை செயலாளர் மாநில செயற் குழு மற்றும் மாநிலக் குழு உறுப் பினர்கள் புதிதாக தேர்வு செய்யப் பட்டனர்.பின்னர் நடைபெற்ற மாநிலக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை களை அறிமுகப்படுத்தி பேசினார்.
ஜூன்18 அன்று நடைபெற்ற மாநிலக் குழு கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் புதுவை எல்லை.சிவகுமார் வரவேற்று பேசினார். பொருளாளர் ப.பா .ரமணி மறைந்த ஆளுமைகளு க்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தை வாசித்தார்.
கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலக் குழு உறுப்பினராகவும், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரை ஞராகவும் இருந்து மறைந்த லிங்கன் பாஸ்டன் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூல்களை வெளியிட்டு அவரை தமிழ் உலகிற்கு இனம் காட்டிய மூத்த தமிழ றிஞர் மறைந்த செ.து. சஞ்சீவி ஆகி யோரின் திருவுருவப்படத்திற்கு பெரு மன்ற பொறுப்பாளர்கள் அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தி மௌன அஞ்சலி கடைபிடித்தனர்.
பொதுச்செயலாளர் மருத்துவர் அறம் பெருமன்றத்தின் அமைப்பு நிலை மற்றும் செயற்குழு முடிவுகளை விளக்கிப்  பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மா நில துணைச் செயலாளர் மு. வீர பாண்டியன் புதிய பொறுப்பாளர் களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
கலை இலக்கிய பெருமன்றத்தை பொருள் செறிந்த  அமைப்பாக வளர்த் தெடுத்து அடுத்த தலைமுறையினரி டம் கொண்டு சேர்த்திட வேண்டும். அரசியல் அரங்கில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை,  அதன் வழிகாட்டி யாக இருக்கின்ற அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்திடும்  நடவடிக்கை களயும் மேற்கொண்டிட வேண்டும்.  நமக்கான ஆற்றலை நமது பொது எதிரிக்கு எதிராக பயன்படுத்தி இந் திய பன்முகத்தன்மையை பாதுகாத் திட துணை நிற்க வேண்டும் என மு. வீரபாண்டியன் பேசினார்.
புதிய மாநிலத் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்ட எஸ்.கே கங்கா, உடன் பொறுப்பேற்றுக் கொண்ட துணைச் செயலாளர்கள் செயற்குழு மாநிலக்குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்.
பெருமன்ற நடவடிக்கைகளுக்கு உடனிருந்து வழிகாட்டுதல்களை நல்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் கட்டுப்பாட்டு குழு தலைவர் க. சந்தானத்திற்கு நன்றி தெரிவித்து, பேராசான்களாகிய ஜீவா,நாவாவ வால் வளர்த்தெடுத்த இயக்கத்தை, அதன் அரசியல் சமூக பண்பாட்டுக் கடமைகளை, இன்று புதிதாக பிறந் தோம் என முழுமூச்சோடு இணைந்து மேல் எடுத்துச் செல்வோம் என பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டு குழு உறுப்பினரும், என்.சி.பி.எச் நிறுவன மேலாண்மை இயக்குனருமான க. சந்தானம் பெரு மன்றம் புதுஉத்வேகத்தோடு செயல் படவேண்டும். கட்சி அமைப்புபோன்று  மூடிய அமைப்பாக இல்லாமல், வெளி ப்பாட்டுத்தன்மையுடைய வெகுஜன அமைப்பாக செயல்பட வேண்டும். மனிதநேயத்தை முன்னெடுத்து, மானி டம் வெல்வதற்கான வழிமுறைகளை இணைந்து கடைபிடித்திட வேண்டும் எனப் பேசினார்.
பொதுச்செயலாளர் மருத்துவர் த. அறம் பெருமன்றத்தின் வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார். கடந்த ஆண்டுகளில் 412 வேலை நிகழ்வுகள் நடந்தேறி உள்ளன .மக்கள் கலை விழாவை மயிலாடுதுறை பெரு மன்ற குழுவினர் முன்னெடுத்துள்ளது பாராட்டத்தக்கது .சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெருமொன்ற தொடர்பு களை பலப்படுத்த வேண்டும்.மாவட்ட கூட்டங்களை கிளைக்களை முறை யாக நடத்திட வேண்டும் எனப் பேசினார்.
பொது செயலாளர் வேலை அறிக்கை மீதான விவாதத்தில் 17 மாவட்ட பிரதி நிதிகள் கலந்து கொண்டு பெருமன்ற செயல்பாடுகளின் குறை நிறைகளை எடுத்துரைத்து பேசினர்.
முடிவில் பொதுச் செயலாளர் மருத் துவர் த. அறம் பிரதிநிதிகள் முன் வைத்த வாதங்களை தொகுத்து ரைத்து பேசினார். சூழலியல் உள் ளிட்டவைகளை கவனத்தில் கொண்டு செயல்படுத்த தனி குழுக்கள் அமைக் கப்படும்.பேச்சு பயிற்சி  பயிலரங்கு கள் நடத்திட வழி வகைகள் மேற் கொள்ளப்படும். கூட்டு முயற்சிகளை வளர்த்தெடுத்து இயக் கத்தை வெற்றி கரமாக வழி நடத்திட வேண்டும் என பேசினார்.
மாலையில் கலை இலக்கிய பெருமன்றமும் மற்றும் நியு செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத் திய 2022 ஆம் ஆண்டுக்கான 32 வது விருது வழங்கும் விழா நிகழ்வு நடந்தது.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் கே செல்வராஜ், திருப்பூர் மேயர் என். தினேஷ்குமார், துணை மேயர் ஆர். பாலசுப்ரமணியம், கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ். கே .கங்கா, என். சி. பி. எச் நிறு வன மேலாண்மை இயக்குனர் க. சந் தானம் உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு 19 ஆளுமைகளுக் கான விருதுகளை வழங்கி சிறப்பித் தனர் .
முடிவில்பெருமன்றத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் பி ஆர் நடராஜன் நன்றி தெரிவித்து பேசினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *