அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்க ஒன்பதாவது மாநில மாநாட்டில் தீர்மானம் !

Loading

மகாராஷ்டிரா மாநிலத்தைப் போல தமிழ்நாட்டிலும் பத்திரிக்கையாளர் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்றி அமல்படுத்திட வேண்டும்:
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்க ஒன்பதாவது மாநில மாநாட்டில் தீர்மானம் !
சென்னை:  சென்னை தியாகராய நகரில் மே 27 அன்று நடைபெற்ற அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் ஒன்பதாவது மாநில மாநாட்டில் பத்திரிகையாளர்கள் நலன் குறித்த ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழக முதலமைச்சர், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செய்தியாளர்களைப் போல தாலுகா செய்தியாளர்களுக்கும் ஆட்சியர் வழங்கப்படும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும் , பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில் பத்திரிக்கைப் பணியாளர்கள் மற்றும் தாலுகா செய்தியாளர் களையும் இணைத்திட வழிவகை செய்திட வேண்டும், பத்திரிகையாள ரின் வாரிசுகளுக்கு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டண சலுகை கள்  வழங்கிட வேண்டும், பருவ கால இதழ்களுக்கு சுழற்சி முறையில் விளம்பரங்களை வழங்கிட வேண்டும், மகாராஷ்டிரா மாநிலத்தைப் போல தமிழ்நாட்டிலும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி அமல் படுத்திட வேண்டும், வெளியூரிலிருந்து பணி நிமிர்த்தமாக சென்னை வரும் பத்தி ரிக்கை ஊடகவியலாளர்களுக்கு சென்னையில் தங்குவதற்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை தீர்மானங்களும், பத்தி ரிகையாளர்கள் நலவாரியம் அமைத்ததற்கும், முன்களப் பணியாளர்களாக பத்திரிகையாளர்களை அறிவித்த தற்கும், பத்திரிக்கையாளர்கள் ஓய்வு தியத்தை ரூ. 12000/-ஆக உயர்த்தி கொடுத்ததற்கும் தமிழக அரசுக்கு நன்றி பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் ஒன்பதாவது மாநில மாநாடு, சங்கத்தின் தேசிய தலைவர் லயன் டாக்டர். இராஜேந்திரன் தலை மையில் ,சென்னை தியாகராய நகர் சர் .பிட்டி. தியாகராயர் அரங்கில் மே. 27 காலை 10 மணிக்கு தொடங்கியது.
தேசிய ஊடகப் பெருங் கூட்டமைப் பின் (N.M.C)தேசிய தலைவர் திருமதி. ருனு ஹசாரிகாதேசியத் தலைவர் ,சேர்மன்சுரேஷ் கதம் மற்றும் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் வெளியீட்டாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். கே. முருகன், மாநிலத் தலைவர் பா. ஜோதி நரசிம்மன் ,மாநில துணைச் செயலாளர் கோ. அன்பு குமார் முன்னிலை வகித்தனர் .
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவருமான தொல். திருமாவள வன் மாநாட்டை வாழ்த்தி சிறப்புரை த்து பேசினார்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன். குமார், நீதியின் குரல் நிறுவனத் தலைவரும் ,மக்கள் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளருமான சி. ஆர். பாஸ்கரன்,அகில இந்தியரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியத் தலைவர்ஆ.ஹென்றி , சென்னை பிரஸ் கிளப்பின் பொதுச் செயலாளர் சி. விம லேஸ்வரன் ,கல்வியாளர் E .K. T. சிவகுமார், கிங்மேக்கர் நிறுவன இயக்குனரும் ,தலைவருமான S.ராஜசேகர்,  மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டிஸ் இன் நிர்வாக இயக்குனர் வி .ஜெயச்சந்திரன், ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவர் S.A. N.  வசீகரன், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ். பாஸ்கரன், “கட்டு மானத் தொழில்” மாத இதழ் ஆசிரியர் சிந்து பாஸ்கர், டி.டி.பொதிகை தொலைக்காட்சியின் மேனாள் துணை இயக்குனர் ஐ .விஜயன், இந்திய சிறு மற்றும் நடுத்தர பத்திரிக்கைகள் சங்கத்தின் தேசியத் தலைவர் பி ஜி . விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து ரைத்து பேசினர்.
மறைந்த பத்திரிகையாளர் குடும்பத்தினர் இருவருக்கு தையல் எந்திரமும், நலிவடைந்த பத்திரிகையாளர்மற்றும் மறைந்த குடும்பத்தினர்  ஒன்பது பேருக்கு ரூ. 5000/-  நிதி  உதவியும், பிற நலத்திட்ட உதவிகளும் வழங்கப் பட்டது.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ஏ. செல்வராஜ் தலைவராகவும், சி. விம லேஸ்வரன் பொதுச் செயலாளராக வும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சென்னை பிரஸ் கிளப்பின் சார்பில் சிறப்பு அங்கத்தினர் அடையாள அட்டையை அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் வெளியீட் டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் இராஜேந்திரனுக்கு மூத்த பத்திரி கையாளர் சிந்துபாஸ்கர் வழங்கி சிறப்பித்தார்.
அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்  சங் கத்தின் ஒன்பதாவது மாநில மாநாட்டு வரவேற்பு குழு சார்பில் மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், வாழ்த்துரைத்தவர்கள், தேசிய ஊடக பெருங்கூட்டமைப்பினர் மற்றும் சிற ப்பு  பங்கேற்பாளர்கள் அனைவருக் கும் பயனாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப் பட்டது .
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் இ. வெங்கடேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் என். ரமேஷ் பாபு, மாநில அமைப்பு செயலாளர் சி. பச்சையா பிள்ளை, மாநில பொருளா ளர் ஆர்.சாந்தகுமாரி ,மாநில ஊடகப் பிரிவு தலைவர் கே. ரஷித்துல்லா, ஊடக பிரிவு செயலாளர் ஆர். சக்தி வேல், செயற்குழு உறுப்பினர்கள் பி. கலைச்செல்வன், கே.வேலு ,நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.ஆனந்தகுமார், புதுச்சேரி பிரதேச தலைவர் R.. ராஜசேகர் , உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாநில துணைத்தலைவர் டி. முத்துக் குமார் ,தென்சென்னை மாவட்ட தலைவர்ll தமிழன் தி.மு. காமராஜ், வடசென்னை மாவட்ட தலைவர் என். மூர்த்தி ,தென் சென்னை மாவட்ட தலைவர் ஜே. நித்யராஜ்,  பொருளாளர் எம் .பெருமாள் உள்ளிட்ட மாநாட்டு வரவேற்பு குழுவினர் மாநாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்திட்டனர்.
இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களி லிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் வேன்களிலும் பஸ்களி லும் திரளாக வந்திருந்து மாநாட்டில் கலந்து கொண்டனர்.
அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் ஒன்பதாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் .
தீர்மானம்  1
பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்தும், பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைத்ததற்கும், பத்திரிக்கையாளர் ஓய்வூதியத்தை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரமாக உயர்த்தி வழங்கியதற்கும் தமிழக அரசுக்கு அனைத்து  இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2
மாவட்ட செய்தியாளர்களுக்கு ஆட்சியர் அங்கீகார அடையாள அட்டை வழங்குவது போல தாலுகா செய்தியாளர்களுக்கும் வழங்கிட அரசாணை வெளியிட தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3
பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிக்கை பணியாளர்களையும், தாலுகா செய்தியாளர்களையும் வாரியத்தில் இணைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டி இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4
பத்திரிகையாளர்கள் வாரிசுகளுக்கு தனியார், அரசு பள்ளிகள், மற்றும் கல்லூரிகளில்  சலுகைகள் வழங்கிட இந்த அரசை மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5
மாதம் இருமுறை வெளிவரும் இதழ்கள், மற்றும் பருவ இதழ்களுக்கு அரசு விளம்பரங்களை சுழற்சி முறையில் வழங்கிட ஆணை பிறப்பிக்க வேண்டுமென இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6
மகாராஷ்டிரா மாநிலத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் பத்திரிக்கையாளர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்றி அமுல்படுத்திட வேண்டும். என இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது
தீர்மானம் 7
வெளியூரிலிருந்து பணி நிமர்த்தமாக வரும் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சென்னையில் குறைந்த வாடகையில் தங்கும் விடுதிகள் எதுவும் இல்லை எனவே அரசு பத்திரிகையாளர்கள் தங்கி செல்வதற்கு விடுதி ஒன்றை உருவாக்கிட வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *