பத்திரப்பதிவு சட்டப்பிரிவு 55A வில் அசல் ஆவணமின்றி பதிவு செய்யும் இனங்களில் விலக்களிக்க கோரிஆ.ஹென்றி கடிதம்.
தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி பொதுமக்கள் நலன் கருதி
பத்திரப்பதிவு சட்டப்பிரிவு 55A வில் அசல் ஆவணமின்றி பதிவு செய்யும் இனங்களில் விலக்களிக்க
கோரி கடிதம்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி
என்று அவர்கள் எழுதிய கடிதத்தில் அசல் ஆவணம் இல்லாமல் பதிவு செய்ய இயலாது என்கிற
பதிவுத்துறை சட்டப்பிரிவு 55A பிரிவில் பதிவுத்துறை தலைவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகார
வரம்பின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்து சுற்றறிக்கை வெளியிட்டு உதவிடுமாறு
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு காலத்தில் எழுதிக் கொடுப்பவர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும் என்கிற சட்டத்தை மாற்றிஅமைத்து கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் எழுதி கொடுப்பவரும் எழுதி வாங்குபவரும் என இருவரும்கையெழுத்துடும் சட்ட நடைமுறை உள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை வாங்குபவர் மற்றும் விற்பவரின்
புகைப்படத்தை ஆவணத்தில் ஒட்டி பதிவு செய்யும் வகையில் சட்ட நடைமுறையும் இருந்தது.
பிறகு 2012 ஆம் ஆண்டு முதல் வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படத்தை பையோ மெட்ரிக்
வீடியோ ஃபிங்கர் பிரிண்ட் ரெக்கார்டிங் சிஸ்டம் (BIO METRIC VIEDO FINGER PRINT RECORDING SYSTEM)
இடது கை பெருவிரல் கைரேகையையும் கண்களின் கருவிழியையும் பதிவு செய்யும் வகையில் சட்டம்நடைமுறையில் உள்ளது.
மேலும் வாங்குபவர் விற்பவர் மற்றும் சாட்சி கையொப்பம் இடுபவர் ஆகியோர்களின் ஆதார்
அடையாள அட்டையை ஆவணங்களுடன் இணைக்கும் வகையில் பதிவுத்துறை தலைவர் அவர்களின்சுற்றறிக்கை எண் 22049/c.s1/17 தேதி 08.07.2021. சட்டமும் நடைமுறையில் உள்ளது.
அதேபோன்று போலி ஆவணம் தயாரிக்கும் ஆவண எழுத்தர் மற்றும் பதிவு செய்யும் சார்பதிவாளர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுப்பதோடு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கும் சட்டமும்நடைமுறையில் உள்ளது.
மேலும் துணிகரமாக போலி ஆவணங்களை தயாரித்து பதிவு செய்தால் அதனை பதிவுத்துறை
சட்டப்பிரிவு 77A மூலம். தமிழ்நாடு அரசு சட்ட எண் : 41/2022 தேதி 16/08/2022, கடித எண்:
33760/U1/2022, தேதி 27/09/2022 மூலம் மாவட்ட பதிவாளரே விசாரணை மேற்கொண்டு ரத்து செய்யும்சட்டமும் நடைமுறையில் உள்ளது.
அதுமட்டுமல்ல அசல் ஆவணம் வைத்திருப்பவர் ஏதோ ஒரு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தாலும் அந்த ஆவணம் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட சார்பதிவாளரிடம் அவரின்
கையொப்பத்துடன் சான்றிட்ட ஆவண நகலை பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சொல்லும்
நடைமுறையும் வழக்கத்தில் உள்ளது.சொத்துக்களை வாங்கி வைத்துள்ள பொதுமக்களிடம் உள்ள ஆவணம் தனிநபர் ஆவணம் (PRIVATE
DOCUMENT). பதிவுத்துறையிடம் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆவணம் பொது ஆவணம் (PUBLIC
DOCUMENT) இதற்காக தான் பதிவுத்துறை சார்பில் பதிவுத் கட்டணமும் பெறப்படுகிறது.
தற்பொழுது இந்த 55A சட்ட பிரிவின் கீழ் அசல் ஆவணம் இன்றி பதிவு செய்ய இயலாது என்கிற
தங்களின் உத்தரவு பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி அசல் ஆவணத்தை தன் வசம் வைத்துக்கொள்ளும் உரிமையாளர்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதோடு பினாமி சட்டத்தைஊக்குவிக்க கூடிய வகையில் உள்ளது. அது மட்டுமல்ல கடன் கொடுப்பவர்கள் அசல் ஆவணத்தைமட்டும் வாங்கி வைத்துக் கொண்டு, பதிவு அலுவலகத்தில் அடமான கடன் பத்திரத்தை பதிவு செய்யவிலக்கு அளிப்பது போன்று உள்ளது. இதனால் பதிவுத்துறைக்கும் வரும் வருவாயும் தடுக்கப்படுகிறது.மேலும் இந்த சட்டம் அடாவடித்தனத்தையும், அராஜகத்தையும் முன்னெடுத்து அசல் ஆவணத்தைஅபகரித்து வைத்து கொள்பவர்களை ஊக்குவிக்க கூடிய வகையில் உள்ளது. அப்படியே அசல்ஆவணத்தை களவாடி தன் வசம் வைத்துக் கொள்பவர்கள் அந்த ஆவணத்தை பயன்படுத்தி அவரே
கையொப்பமிட்டு பதிவு செய்யவும் இயலாது. என்பதும் அனைவருக்கும் நன்கு தெரியும். மாறாக
களவாடிய ஆவணத்தை சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு திருப்பித் தருவதற்கு அவரிடம் பணம்
பறிக்கும் செயலும் நடந்தேறி இருக்கிறது. இந்த சட்டத்தின் மூலம் தற்பொழுது நகையை திருடுவதைவிட அசல் ஆவணத்தை திருடும் குற்ற செயல் கூடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.மேலும் அசல் ஆவணம் தொலைந்து விட்டாலோ, களவாடப்பட்டாலோ அது சம்பந்தமாகசம்பந்தப்பட்ட காவல்துறையில் புகார் செய்துகொடுத்து தினசரி நாளிதழ்களில் அது குறித்து விளம்பரம்வெளியிட்டு, காவல்துறையிடம் இருந்து (NON TRACEABLE CERTIFICATE) கண்டுபிடிக்க முடியாத சான்றுபெற்று வந்தால் தான் பதிவு செய்ய இயலும் என்கிற பதிவுத்துறையின் சுற்றறிக்கை ஏற்புடையதல்ல.
இதனால் பொதுமக்கள் பலமுறை காவல் நிலையத்திற்கு அலைந்து திரிய வேண்டிய நிர்பந்தம்
ஏற்படுவதோடு, மிகுந்த அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவதோடு, காலம் நேரம் வீண்விரையமும், மனச்சங்கடமும் ஏற்படுகிறது. காவல்துறை விசாரணை என்ற பெயரில் மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துகின்றனர். ஆவணத்தை எப்படி எடுத்துக் கொண்டு சென்றீர்கள் எத்தனைமணிக்கு எந்த சாலையில் எந்த இடத்தில் எடுத்துக் கொண்டு போனீர்கள் அப்பொழுது எந்த கைபேசி
எண்ணை பயன்படுத்தினீர்கள். அந்த கைபேசி எண் குறித்த புவியியல் விவரம்,
(GEOGRAPHICAL PROFILE), கண்காணிப்பு கேமரா பதிவு (CCTV SUVEILLANCE), என இவை அனைத்தையும்விசாரித்த பிறகு காவல்துறையும் சம்பந்தப்பட்ட சார் பதிவாளரையும் அணுகி சான்றிட்ட நகலைகோருதல் போன்ற பலவற்றை ஆராய்வதாக சொல்லி பல ஆண்டுகள் கால தாமதம்ஏற்படுத்துகின்றனர். காவல்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண்:
Rc.no.2029209/General.1(1)/2022 இன் படி அவர்கள் நடந்து கொள்வதில்லை. இதனால்
பொதுமக்களுக்கு பதிவுத்துறை மேல் இருக்கும் நன்மதிப்பும் மரியாதையும் குறையும் வாய்ப்புள்ளது.
இதனால் சொத்துக்களை தங்களின் மருத்துவ செலவு உள்ளிட்ட அவசிய அத்தியாவசிய தேவைகளுக்குஅவசரமாக சொத்துக்களை விற்க நினைக்கும் பொதுமக்கள் உடனடியாக விற்க முடியாத நிலைக்குதள்ளப்படுகின்றனர்.
எனவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்கள், மேற்கண்டநிகழ்வுகளை
தங்களின் கவனத்தில் கொண்டு, 2000 ஆம் ஆண்டுக்குப் பின் வாங்குபவர் விற்பவர் இருவரும்
கையொப்பமிட்ட ஆவணங்கள் இருவரின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ள ஆவணங்கள் பயோமெட்ரிக்
வீடியோ ஃபிங்கர் பிரிண்ட் ரெக்கார்டிங் சிஸ்டம் அடிப்படையில் பதிவு செய்த ஆவணங்கள் ஆதார்எண்ணை இணைத்து பதிவு செய்துள்ள ஆவணங்கள் என்ற அடிப்படையிலும் அதேபோன்றுஆவணங்கள் தொலைந்து போனால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் என்னை பதிவு செய்துசெய்தித்தாள்களில் விளம்பரம் தந்து அதனை கொண்டு வந்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் பொழுது பதிவுத்துறையில் உள்ள (PUBLIC DOCUMENT) ஆவணத்தையும்வாங்குபவர் விற்பவரின் அடையாள அட்டையையும் சரிபார்த்தும், மேலும் வாங்குபவரின் விருப்பத்தின்
அடிப்படையிலும் பதிவு செய்யும் வகையில் தாங்கள் பதிவுத்துறை சட்டப்பிரிவு 55A வை, பொதுமக்கள்நலன் கருதி திருத்தம் செய்து சுற்றறிக்கை வெளியிட்டு உதவிடுமாறு பொதுமக்களின் சார்பில் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.