பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி நன்றி

Loading

பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி நன்றி தெரிவித்தும், கோரிக்கை விடுத்தும் கடிதம்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், FAIRA சார்பில் கடந்த 29/04/2023 அன்று பதிவுத்துறை தலைவருக்கு எழுதிய FAIRA கடித எண். 009/2023 இன் மீது பதிவுத்துறை தலைவர் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து, ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களை பதிவு செய்ய வரும் பொதுமக்கள் இனி எந்த விதமான வீண் அலைச்சலும், மன உளைச்சலும், சிரமமும் இன்றி பதிவு செய்யும் வகையில் கூடுதலாக உதவியாளர் ஒருவரை நியமித்து, தேவையான முன் அனுமதி டோக்கன் கிடைக்கும் வகையில் வழிவகை செய்து, சென்னை மண்டல பதிவுத்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆணை எண். 02/அ1/2023, நாள் 03.05.2023 ஆக பிறப்பித்து தகுந்த தீர்வினை ஏற்படுத்தி தந்தமைக்கு மேற்கண்ட FAIRA கூட்டமைப்பின் சார்பில், உளமார்ந்த பாராட்டுக்களையும், நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும்,
மேலும் பதிவுத் துறையில் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கும், நிரந்தரமாக உரிய பதிவாளர்களை நியமனம் செய்வதற்கும் பதிவுத்துறை தலைவர் தகுந்த நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *