நாட்டு நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்டன.
![]()
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள திருவேங்கடம் பேரூராட்சியில் நாட்டு நாய் வளர்ப்போர் சங்கத்தின் சார்பில் நாட்டு நாய் கண்காட்சி நடைபெற்றது. சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். வேட்டை நாய் என்று அழைக்கப்படும் திருவேங்கடம் அருகேயுள்ள சிப்பிப்பாறை நாய் மற்றும் பல்வேறு வகையான நாட்டு நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்டன. இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட பொருளாளர் சங்கை இல.சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

