மனிதநேய பண்பாளர் நா.கார்த்திக் பிறந்தநாள் விழா
கோவை மாநகர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் முன்னாள் துணை மேயரும் 40 ஆண்டுகளாக கோவை மாநகர மக்களுக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும். மனிதநேய பண்பாளர்
நா.கார்த்திக் Ex MLA அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ் தலைமையில் பிறந்தநாள் விழா மிக விமர்சையாக கோவை புலியகுளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில மகளிர் அணி தலைவி
ஐ.கரோலின் விமலாராணி, கௌரவ ஆலோசகர்கள் அ.லியோ பெர்னாண்டஸ், எம். ஞான ஆனந்த் கௌரவ தலைவர் பி.எஸ். ஸ்டீபன், செயற்குழு உறுப்பினர் எஸ் கிறிஸ்டி மோனிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மாநகர மாவட்ட போதகரணி செயலாளர் பாஸ்டர் எம். யேசு ராஜன் ஜெபித்து அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் அவர்களின் அன்புத் தந்தை எம். நாராயணசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், தண்ணீர் பாட்டில்கள், காலணிகள், பேனா, பென்சில் மற்றும் ஏழை எளிய தாய்மார்களுக்கு புடவை, போர்வை ஆகியவைகளை 158 பேருக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர்
டாக்டர் பா.மாணிக்கம் அண்ணா, கலைஞர் அன்பு படிப்பகம் தேவராசு நினைவகத்தின் செயலாளர் புலியகுளம்
தே.இளங்கோ, கணபதி மாநகர் திமுக கழகத்தின் மகளிர் அணி பொறுப்பாளர் ரம்யா என்ற மாலதி தமிழமுதம் காளிதாஸ் அறப்பணி மையத்தின் தலைவர் தமிழ் அமுதம் அய்யாசாமி ,கோவை டிசில்வா, சவுரிபாளையம் கிளை தலைவர் எக்ஸ்.பால்ராஜ் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக காலையில் பிறந்த நாளை முன்னிட்டு கிறிஸ்தவ சபைகளில் நா.கார்த்திக் அவர்கள் சரீர சுகத்துடன் நீடூழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற சிறப்பு ஆராதனை நடைபெற்றது முடிவில் கோவை மாநகர மாவட்ட மகளிர் அணி தலைவி ஜி. ஜோஸ்பின் மெர்சி நன்றி கூறினார்.