ஊராட்சி ஒன்றியத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். ஒன்றிய துணை குழு தலைவர் ராஜா வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி. ஊ ) ரத்தினவேலு முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் பாண்டியராஜன் தனது வேலைகளுக்கு பணத்தினை நாட்களைக் கடத்தாமல் உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஒன்றிய கவுன்சிலர் பாண்டி கண்ணன் சிலுக்கு பட்டி ரோடு பாதியோடு நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அதனை முழுமை செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். கவுன்சிலர் கந்தசாமி ஒத்த புஞ்சை கிராமத்தில் மின்சாரம் டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுது ஏற்படாமல் முழுமையாக மின்சாரம் கிடைக்க உடனடியா நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் வேளாண்மை துறை அலுவலர் மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளுக்கிணங்க கண்மாய்களில் மண்வளம் தேவைப்பட்டு எடுக்கக்கூடிய நபர்கள் தன்னை அணுகும்படி கேட்டுக் கொண்டார். கூட்டத்திற்கு வட்டார துணை வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் இந்த நிதியாண்டு 2023-24 க்கு ஒவ்வொரு கவுன்சிலருக்கும் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் வேலை செய்யலாம் என தெரிவித்தார் வட்டார துணை வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரன் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.ஒன்றிய துணை குழு தலைவர் ராஜா நன்றியுரை கூற கூட்டம் இனிதே நடைபெற்றது