ரியல் எஸ்டேட் சங்கத்தினரிடம் அமைச்சர் கருத்து கேட்பு

Loading

வீட்டு வசதி துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில், FAIRA தலைவர் டாக்டர். ஆ.ஹென்றி அவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை.
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்களின் தலைமையில், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சிங்காரவேலர் மாளிகை பத்தாவது தளத்தில் நடைபெற்றது.
இக்கருத்துக்கேட்பு கூட்டத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் கலந்து கொண்டு,  தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள் 2019, TNCDBR-2019 இல் உள்ள பல்வேறு சட்ட பிரிவுகளில் இருக்கின்ற சிக்கல்களை கலைய, பல மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
குறிப்பாக கட்டிட திட்ட அனுமதியில் குடியிருப்பு பகுதி மற்றும் வணிக பகுதி ஆகியவற்றின் தளப்பரப்பளவு (FSI) பக்கவாட்டு திறவிடம், (SET BACK) கட்டிடங்களின் உயரம், (BUILDING HEIGHT) அலகுகளின் எண்ணிக்கை, (UNITS) முடிவுச் சான்றிதழ், (COMPLETION CERTIFICATE) திறவிடம் (OSR) ஆகாயத்திறவிடம், (OTS) உள் அமைவிடம், அதிகாரப் பகிர்வுகள் (POWER DELEGATIONS) இறுதி ஒப்புதல் (FINAL APPROVAL) கட்டணங்கள் (FEES STRUCTURE) உட்பிரிவு அனுமதிகள் (SUBDIVISION APPROVALS) கிராம நத்தம் மனைகளுக்கும் ஒரே சீரான அனுமதி, கடலோர பாதுகாப்பு மண்டலத்தில் புதிய விதிகளை அனுமதித்தல் (CRZ), நீர்நிலைகளின் அருகில் உள்ள நிலங்களுக்கு தடையின்மைச் சான்று, மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமம் விவகாரம் (HACA), ஒற்றைச்சாளர முறை அனுமதி விவகாரம் (SINGLE WINDOW SYSTEM), பல்வேறு தடையின்மைச் சான்று,  (NOC) அனைத்து பொறியாளர்களுக்கும்  ஒரே சீரான பொதுவான பதிவு, பண்ணை நிலங்களுக்கு அனுமதி வழங்க புதிய கொள்கை (FARM LAND APPROVAL) வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தி பயன்படுத்தாத நிலங்களுக்கு தடையின்மைச் சான்று போன்றவை குறித்தும்,
வீட்டுமனை பிரிவு, கல்யாண மண்டபம், பள்ளிகள், மணமகிழ் மன்றம், திரையரங்குகள் போன்றவற்றிற்கு அணுகு சாலை அளவுகளில் மாற்றம் குறித்தும், மனை வரன்முறை சட்டத்தை மீண்டும் கொண்டு வந்து நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாகவும்,  கட்டுனர்கள் மற்றும் மனை அபிவிருத்தியாளர்களை ஒருங்கிணைத்து ரியல் எஸ்டேட் துறைக்கென ஒரு கவுன்சிலும், பொறியாளர்களை ஒருங்கிணைத்து ஒரு கவுன்சிலும் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும், கட்டுனர்கள், வீட்டுமனை அபிவிருத்தியாளர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர்களின் சார்பில் தனது கருத்தினை பதிவு செய்தார்.
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற  இக்கூட்டத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, வீட்டு வசதி துறை வரலாற்றில் இப்படி அனைத்து சங்கங்களையும் அழைத்து, அனைவருக்கும் பேச வாய்ப்பளித்து, இவ்வளவு பொறுமையாக எங்களின் கருத்துக்களை கேட்டு தீர்வு காண்பது என்பது, இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை, இது உண்மையில் வரலாற்று நிகழ்வு எனவும், மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் அவர்கள், திராவிட மாடல் ஆட்சியில் இத்துறைக்கு கிடைத்த மாபெரும் கொடை எனவும்,  நிச்சயம் இனி இத்துறையில் இருக்கிற பிரச்சனைகள் விரைவாக தீரும், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை இனி மாபெரும் வளர்ச்சியும் எழுச்சியும் பெறும் என்ற நம்பிக்கையில் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் பதிவு செய்தனர்.
சங்கங்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களின் மீது, அமைச்சர் அவர்கள் வீட்டு வசதித் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, எதற்கெல்லாம் சாத்தியம் இருக்கிறதோ அவற்றையெல்லாம் பரிசீலித்து விரைவாக தீர்வினை ஏற்படுத்தித் தருவோம் என உறுதி அளித்தனர்.
மேலும் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் அவர்களுடன் வீட்டு வசதி துறை செயலாளர் (TNHUD) செல்வி.அபூர்வா ஐஏஎஸ், நகர் ஊரமைப்பு இயக்குனர் (DTCP) B.கணேசன் ஐஏஎஸ், வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் (HOUSING BOARD) சரவணவேல்ராஜ் ஐஏஎஸ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *